எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதிதாக அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம்-நாகை பைபாஸ் சாலையில் லாரி ஓட்டுனர்களை குறிவைத்து ஒரு கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது வாகன ஓட்டிகளை நடுங்க வைத்த நிலையில் வழிப்பறி கொள்ளையன் மொட்டை விஜயை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
துரத்தி வரும் போலீசாருக்கு நடுவிரலை நீட்டி காட்டிவிட்டு எஸ்கேப் ஆன வழிப்பறி மன்னன் மெட்டை விஜய் தான் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டவர்..!
எம்.புதூர் செல்லும் வழியில் வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு சென்போனையும் பணத்தையும் பறிகொடுத்ததாக இரவு இரண்டரை மணியளவில் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் மூலம் புகார் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த ஸ்பாட்டுக்கு செல்வதற்குள், கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் பெரியப்பட்டு சர்வீஸ் சாலையில், லாரியை ஓரங்கட்டிவிட்டு அசதியில் தூங்கிக்கொண்டிருந்த லாரி ஓட்டுனரை அரிவாளால் வெட்டிவிட்டு பணம், செல்போன் பறிக்கப்பட்டதாக அடுத்த புகார் அழைப்பு வந்தது.
அப்போது சுதாரிப்பதற்குள் மீண்டும் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 3வது அழைப்பு வந்தது.பெரியப்பட்டு சர்வீஸ் சாலையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் லாரியை சாலையோரம் ஓரங்கட்டிவிட்டு தூங்கிக்கொண்டிருந்த மற்றோரு லாரி ஓட்டுனரை தலையில் பலமாக தாக்கிவிட்டு ஒரு கும்பல் பணத்தை பறித்துக்கொண்டு செல்வதாக வந்த புகார் தான் அந்த 3-வது அழைப்பு. இப்படி விழுப்புரம்-நாகை பைபாஸ் சாலையை குறிவைத்து 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் வழிப்பறிகள் நடந்ததாக வந்த புகாரால் போலீசார் திகைத்து போயினர். உனவே விழுப்புரம்-நாகை பைபாஸ் PATROL போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். சுங்கச்சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
வழிப்பறி கும்பலாம் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா போதையில் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்ததாகவும், செல்போன் ஜி-பே PASSWORD-ஐயும் மிரட்டி வாங்கிச்சென்றதாகவும் மூன்று பேரில் ஒரே தகவலை தெரிவித்திருக்கின்றனர். இருதினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூரில் கத்தியால் தாக்கி ஓட்டுனரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்து போலீசாரிடம் இருந்து தப்பியது. அப்போது பைக்கில் தப்பியவர்களை துரத்திய போலீசார் அவர்களை வீடியோ எடுத்திருந்த நிலையில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்கும் முயற்சியில் இருந்த போது தான் அதே கும்பல் விழுப்புரம்-நாகை பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து 3 வழிப்பறியில் ஈடுப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் அந்த கும்பல் எம்.புதூரில் முந்திரி காட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தலவல் கிடைத்தது. இதையடுத்து முந்திரிக்காட்டை போலீஸ் படை சுற்றிவளைத்து கட்டம் கட்ட 6 பேரும் தொக்காக சிக்கினர். இதில் 5 பேர் முரண்டு பிடிக்காமல் போலீசாரில் பிடிக்கு ஒத்துழைக்க, புதுச்சேரியை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையனான மொட்டை விஜய் மட்டும் அரிவாளை கையில் வைத்துக்கொண்டு முரண்டு பிடித்ததாக தெரிகிறது.
தப்பிக்க முயன்று மொட்டை விஜய் அடுத்தடுத்து இரு போலீசாரை அரிவாளால் வெட்டிய நிலையில் தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் என்கவுண்டர் செய்யப்பட்டார் மொட்டை விஜய். காயம்பட்ட காவலர்களை கடலூர் அரசு மருத்துவமனையில் சந்தித்த கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார், தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் கொள்ளையன் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார்.
என்கவுண்டர் செய்யப்பட்ட மொட்டை விஜய் மீது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை முயற்சி வழிப்பறி, கூட்டுக்கொள்ளை என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களை குறைக்க போலீசார் என்கவுண்டர் என்னும் இரும்பு கரம் கொண்டு தடுத்து வருவதாக கூறப்பட்டாலும், சென்னையில் செயின் பறிப்பு இராணிய கொள்ளையன் ஜாஃபர், மதுரை கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திரபோஸ் தற்போது மெட்டை விஜய் என அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் என்கவுண்டர்களால் மனித உரிமை மீறப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
என்கவுண்டர் என்பது போலீசாரின் உச்சபட்ச நடவடிக்கை என்ற நிலையில் குற்றங்களை முளையிலேயே கில்லி எரிவதில் கோட்டைவிட்டுவிட்டு, குற்றங்கள் புற்றீசல் போல பெருகிவிட்ட பிறகு என்கவுண்டர் என்னும் துருபிடித்த இரும்பு கரத்தை தூக்கிக்கொண்டு வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.