கேங்ஸ்டராக மாறிய கில்லர் திமிங்கலம்..! திமிங்கலத்திலேயே நான் ரவுடி ரகமாக்கும்

எழுத்தின் அளவு: அ+ அ-

18 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட நீல திமிங்கலத்தை, 2 அடி நீளமே உள்ள கில்லர் திமிங்கலங்களின் கூட்டம், ரத்தம் தெறிக்க தெறிக்க வேட்டையாடியதன் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அதன் கொரூரத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..!

உலகின் மிகப்பெரிய உயிரினங்களில் ஒன்றான நீல திமிங்கலத்தை ஒரு திமிங்கல கூட்டமே சுத்துப்போட்டு வேட்டையாடியதன் பதறவைக்கும் காட்சிகள் தான் இவை..!

உலகின் மிகப்பெரிய உயிரினம் என்றால் அது திமிங்கலம் தான். சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் காலத்தில் நிலத்தில் டைனோசரும், கடலில் மொசாசர்ஸ் டைனோசருமே பெரிய உயிரினங்களாக இருந்தன. பின்னர் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்ததில் மொசாசர்ஸ் டைனோசர் படிப்படியாக பரிணாமம் கண்டு தற்போது நீலத் திமிங்கலமாகி உள்ளது. 

திமிங்கலங்களிலேயே மிகப்பெரியது நீலத் திமிங்கலம். கிட்டத்தட்ட நூறடி நீளம், 2 லட்சம் கிலோ எடை கொண்ட ஒரு நீலத் திமிங்கலம், 40 யானைகளுக்கு சமமான ஓர் உயிரினமாகும். ஒரே வாயில் பல கிலோ எடை கொண்ட மீன்களை லபக்கென விழுங்கும் இவை, ஒரே நேரத்தில் 80 ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் என்றால் அதன் பிரம்மாண்டத்தை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

மனிதனின் இருதயத்தின் எடை வெறும் 250 கிராம் தான் என்ற நிலையில் திமிங்கலத்தின் இதயம் ஆயிரத்து 360 கிலோ எடை கொண்டது. பொதுவாக மீன்கள் செவுள்கள் மூலம் நீரில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சிக் சுவாசிக்கும் என்ற நிலையில் பாலூட்டி இனத்தை சேர்ந்த திமிங்கலங்கள் மனிதனை போல நுரையீரல் மூலமே சுவாசிக்கின்றன. இதனாலேயே நீரில் வாழ்ந்தாலும் திமிங்கலங்கள் சுவாசிக்க மேல் பரப்புக்கு வந்து செல்கின்றன. அவ்வாறு ஒருமுறை காற்றை இழுத்துக் கொண்டு நீருக்கடியில் சென்றால் 45 நிமிடங்கள் கழித்தே மீண்டும் சுவாசிக்க மேலே வரும். 

இப்படி கேட்க கேட்க பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் நீல திமிங்கலத்தையே கில்லர் திமிங்கலங்களின் கூட்டம் சுத்துப்போட்டு வேட்டையாடியதன் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரெமர் விரிகுடா கடற்கரையில் Bremer Canyon என்ற கடல் பூங்காவில் தான் இந்த வியத்தகு சம்பவம் நடந்துள்ளது. pygmy வகையை சேர்ந்த சுமார் 18 மீட்டர் நீளமுள்ள நீல திமிங்கலத்தை 60 கில்லர் திமிங்கலங்கள் கூட்டம் ரத்தம் சொட்ட சொட்ட வேட்டையாடியது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

ஓர்கா என்று அழைக்கப்படும் இந்த கில்லர் திமிங்கலங்கள் ஒரு வேட்டையாடி இனம் என்றாலும் தன்னை விட பல மடங்கு பெரியதான நீல திமிங்கலத்தையே வேட்டையாடியது கடல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கொலை தாக்குதலில் இருந்து தப்பிக்க நீல திமிங்கலம் எவ்வளவோ போராடியும், அதை வேட்டையாடி கொன்று தீர்த்த மகிழ்ச்சியை கில்லர் திமிங்கலங்கள் வாலை தண்ணீரில் அடித்து கொண்டாடி தீர்த்ததாக கூறப்படுவது ஆச்சரியமாகவே உள்ளது.  

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகின் மிகப்பெரிய ஓர்கா இனத்தை சேர்ந்த சுமார் 40 அடி நீளம் கொண்ட பயங்கர சுறா-வை கில்லர் திமிங்கலங்கள் வேட்டையாடியதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். வெறும் 6 மீட்டர் நீளமும், 2 ஆயிரம் மெட்ரிக் டன் எடையும் கொண்ட டால்பின் இனத்தைச் சேர்ந்த கில்லர் திமிங்கலங்கள் அதை விட பல மடங்கு பெரிய உருவத்தை கொண்ட சுறா-வை வேட்டையாடியது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதை ஆராய்ந்த போது தான் சுறா-க்களை வேட்டையாட கில்லர் திமிங்கலங்கள் நூதன டெக்னிக்கை கையாண்டது ஆராய்ச்சியாளர்களை வாயடைக்க வைத்தது.

தனித்து வேட்டையாடுவதை விடுத்து கூட்டமாக வேட்டையாடும் யூக்தியை கையாள தொடங்கிய கில்லார் திமிங்கலங்கள், சுறாக்களின் வயிற்றுப் பகுதியை தாக்கி, அதிவேக ரத்த கசிவை ஏற்படுத்தி வேட்டையாடும் புதுவித டெக்னிக்கை கையாள தொடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தான் தற்போது பயங்கரமான ஓநாய்களின் வேட்டையை காட்டிலும், மிக கொடூரமான முறையில் நீல திமிங்கலத்தை கில்லர் திமிங்கலங்களின் கூட்டம் வேட்டையாடி இருப்பதன் காட்சிகள் வெளியாகி, அவைகள் எந்த அளவுக்கி கொடூர உயிரினங்களாக மாறியிருப்பதை காட்டுவது போல் அமைந்துள்ளது.

Night
Day