கோடை வெயிலுக்கு குளு குளு தீம் பார்க்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலின் தாகத்தை தணிக்கும் விதமாக சென்னை ஈஞ்சம்பாகத்தில் உள்ள ஸ்னோ கிங்டம் தீம் பார்க்கில் ஏராளமான வருகை தந்து உற்சாகமடைந்து வருகின்றனர். இதுகுறித்து, இச்செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தை தணிக்க மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்லும் நிலையில் குளு குளு தீம் பார்க்கில் பனிக்கட்டிகளுடன் விளையாடும் காட்சிகள் தான் இவை.

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அருந்தி உடலின் சூட்டை மக்கள் தணித்து வருகின்றனர். இருப்பினும், ஊர்களில் வெயிலின் தாக்கத்தை தணிக்க குளம், ஆறு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரும் நிலையில், சென்னை போன்ற நகர் பகுதிகளில் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வரும் வேலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஸ்னோ கிங்டன் எனும் தீம் பார்க் சென்று உற்சாகமடைந்து வருகின்றனர். 

கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், பிள்ளைகளை ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு அழைத்து சென்று விடுமுறையை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆனால், தற்போது இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளாலும், கட்டுபடுத்த முடியாத கூட்ட நெரிசலாலும் பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. 

இதனால், பனிப் பிரதேசங்களில் இருப்பது போன்று வசதிகளை உண்டாகி தரும் வகையில் ஆயிரத்து 400 சதுரடியில் மைனஸ் 8 டிகிரியில் முழுவதும் பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்னோ கிங்டம் தீம் பார்க் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மைனஸ் எட்டு டிகிரி குளிருடன் தீம் பார்க் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குளிரை தாங்கும் விதமான கையுறைகள், ஜாக்கெட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தூய்மையான குடிநீரில் பனிக்கட்டிகள் உருவாக்கப்படுவதால் எந்தவிதமான அசோகரிமும் ஏற்படாது என்கின்றனர் ஸ்னோ கிங்டம் ஊழியர்கள்.

சிம்லா, ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பனித்துளிகளை பார்க்க லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில், ஸ்னோ கிங்டமில் சுற்றிலும் பனிக்கட்டிகள், பனிப் பிரதேசங்களில் இருக்கும் வீடுகள், பனிப்பிரதேச விலங்குகளின் உருவ பொம்மைகள் தத்துரூபமாக காட்சியளித்ததால் பனிக்கட்டிகளை வீசி எரிந்து விளையாடியும், குடும்பத்துடன் இணைந்து பொதுமக்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். 

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடும்பத்துடன் இதுபோன்ற தீம் பார்க்களுக்கு சென்று பொதுமக்கள் கோடை விடுமுறையை ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர். 

Night
Day