சமத்துவ நாள் கொண்டாட்டத்தில் "சமத்துவம்" MISSING! கிழிந்து தொங்கும் விளம்பர திமுகவின் முகத்திரை!

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி விளம்பர திமுகவின் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ நாள் கொண்டாட்டத்தில் சமத்துவம் காணாமல் போனதாகவும், வெற்று விளம்பரமே மிஞ்சியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..! விழாவில் என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..!

மேடைகள் தோறும் வாய்க்கு வாய் சமத்துவத்தையும் சமூக நீதியையும் தூக்கிபிடிப்பது போல் பேசும் திமுக-வின் உண்மையான சமத்துவத்தை வட்டம் போட்டு காட்டுகிறது இந்த காட்சி..!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடத்தப்பட்ட சமத்துவ நாள் கொண்டாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பழங்குடியினர் கலந்துக்கொண்டனர். 

விழா தொடங்கியது என்னவோ 11 மணிக்கு தான் என்றாலும், திமுக அமைச்சர் தலைமை தாங்குகிறார் என்பதற்காக காலை 8 மணிக்கெல்லாம் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட தூய்மை பணியாளர்களும் பழங்குடியினரும் நாற்கலிகளில் அமரவைக்கப்பட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகவே இருந்தது. 

இந்தநிலையில் தான் கிணத்தை காணவில்லை என கூச்சலிடும் நடிகர் வடிவேலு போல திமுக அமைச்சர் பங்கேற்ற சமத்துவ நாள் கொண்டாட்டத்தில் சமத்துவத்தை காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிகழ்ச்சியை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் பழங்குடியினருக்கு மதிய உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திமுகவின் சமத்துவ சித்தாந்தத்தை பிராண்டிங் செய்ய முயன்ற அமைச்சர் ராஜகண்ணப்பனின் முயற்சி, திமுகவின் போலி சமத்துவம் என்னும் முகத்திரையை கிழித்தெறியும் சம்பவமாக மாறியது.

தூய்மை பணியாளர்களுடன் சமமாக அமர்ந்துக்கொண்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் உணவருந்திக்கொண்டிருக்க, கேமரா-வின் FOCUS-ஐ தாண்டி, அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த தூய்மைபணியாளர்களுக்கு இலை கூட போடாமல் மணிக்கணக்கான வெறும் காட்சிக்காக மட்டுமே அமரவைக்கப்பட்டிருந்தனர் கொடுமையின் உச்சம்.

தூய்மை பணியாளர்களுடன் சமபந்தி போஜன என்ற வெற்று விளம்பரத்துக்காக, பசியில் துடித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை பந்தியில் அமர வைத்துவிட்டு, முன் வரிசையில் இருந்தவர்களுக்கு மட்டும் உணவு பரிமாறி கேமராவுக்கு போஸ் கொடுத்த திமுக அமைச்சரின் செயல் இது தான் சமத்துவத்தின் லட்சணமா? என கேட்கும் அளவுக்கு இருந்தது.

காலை 8 மணிக்கெல்லாம் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட ஊழியர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல், நாற்காலிகளை நிரப்பிக்காட்டி  விளம்பரம் தேடியதோடு, ஏழை தூய்மை பணியாளர்களின் பசியிலும் விளம்பரத்தை தேடியது, இந்த கேடுகெட்ட ஆட்சியில் வெற்று விளம்பரத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதையே உணர்த்தியது. 

PHOTO SHOOT நடத்தி பில்ட்-அப் காண்பிடித்த அமைச்சரும், அவரது சகாக்களும் கிளம்பிய பின்னரும், பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு இலை கூட போடாமல் மேலும் தாமதிக்கப்பட்டதால் பசியால் பொறுமை இழந்து கொதித்தனர் தூய்மை பணியாளர்கள். சமத்துவ விருந்து என தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து அவர்களை அலைக்கழித்தது மட்டுமல்லாமல், அவர்களை ஏளனமாக நடத்திய திமுகவின் போக்கு கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. 

Night
Day