எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதை அதிகரிக்கும் வகையில் பெண்களுக்கு எதிராக ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசும் பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியும், நீக்க மாட்டேன் என விளம்பர அரசு அடம்பிடிப்பதன் பின்னனி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விளம்பர திமுக அரசின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தது மட்டுமல்லாமல் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழலுக்கு தமிழகம் மாறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனை ஆதரிக்கும் விதமாக பெண்களுக்கு எதிராக விளம்பர திமுக அமைச்சர்களே மேடைகளில் ஆபாசமாகவும் அவதூறாகவும் தொடர்ந்து பேசி வருவது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி பெண்களை மிகவும் ஆபாசமாகவும், இழிவாகவும், அவதூறாகவும் பேசிவிட்டு மன்னித்து விடுங்கள் என வடிவேல் நகைச்சுவையில் வருவது போல கேட்டுவிட்டு ஏதோ சுதந்திர போராட்ட தியாகி போல தினமும் சட்டப்பேரவைக்கு வந்து சென்று கொண்டிருக்கும் நிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
பெண்களுக்கு எதிராக அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிய விவகாரத்தில் பொன்முடி கட்சிப் பதவியை பறித்த முக ஸ்டாலின், ஏன் இன்னும் வனத்துறை அமைச்சர் பதவியை மட்டும் பறிக்காமல் வைத்திருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பினாலும், சமூக செயற்பாட்டாளர்கள் என்னவோ வாய் திறக்காமல் இந்த விவாகரத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக செயற்பாட்டாளராக உள்ள ரேணுகா ஜெயா பிளஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசின் உயர் பதவியில் உள்ளவர்களே அவதூறாகவும் அருவருக்கத்தக்க வகையில் மேடைகளில் பேசுவது தமிழ்நாட்டில் மேலும் பெண்கள் மீதான தாக்குதல்களையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் அதிகரிக்க தான் செய்யும், என குற்றம்சாட்டினார்.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர், பொன்முடியின் அமைச்சர் பதவியை பறித்து பெண்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு இதுதான் தண்டனை என காட்ட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இப்படி பெண்களை மிகவும் கேவலமாகவும், இழிவாகவும், அவதூறாகவும் பேசிவிட்டு அமைச்சர் பதவியில் நீடிக்கும் பொன்முடியை நீக்காமல், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக நாடகமாடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் மக்களோ ஒட்டுமொத்தமாக விளம்பர திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற மனநிலைக்கு பொன்முடி போன்றோரின் பேச்சு சாட்சியாக அமைந்துள்ளது என்பதே நிதர்சனம்..