சிவகாசி அருகே இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - மூவர் உடல் கருகி உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சுமார்  30 நிமிடங்களுக்கு மேலாக பட்டாசு வெடித்து சிதறியதால் தீயணைப்பு வீரர்கள் சிரமம் அடைந்தனர். இந்த கோர விபத்தால் இதுவரை 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் . இந்த நிலையில் பட்டாசு தொழிற்சாலைக்குள், தொழிலாளர்கள் சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Night
Day