எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை மாநகராட்சியில் பொது கழிப்பறையை சுத்தம் செய்ய தனியாருக்கு 430 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்தும் கழிப்பறைகள் சுத்தம் இல்லாமல் துர்நாற்றம் வீசுகின்றன. கழிப்பறையிலும் ஊழல் செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் அளித்தார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பொது கழிப்பறையை சுத்தம் செய்ய தனியாருக்கு 430 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
ஆனால் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. விளம்பர திமுக அரசின் பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளாரா இல்லை மேயர் பிரியா தனியார் உடன் கைகோர்த்தாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னையில் 95 சதவீத கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு கழிப்பறையை சுத்தம் செய்யும் முன்பு 3 ரூபாய் 18 பைசா அளிக்கப்பட்டது. ஆனால் விளம்பர திமுக ஆட்சியில் கழிப்பறைக்கு ஒதுக்கும் தொகை
115 மடங்கு அதிகரிக்கபட்டு 363 ரூபாயை தனியாருக்கு வழங்கியும் கழிப்பறை சுத்தமாக இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மால்களில் கூட கழிப்பறை சுத்தம் செய்ய 100 ரூபாய் தான் செலவு செய்யபடுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
மாநகராட்சிய ராயபுரம் மண்டலத்தில் அரசு கழிப்பறையை சுத்தம் செய்யும்போது 3 ரூபாய் 18 பைசா தான் செலவு ஆகியுள்ளது. மாநகராட்சியே ராயபுரம் மண்டலத்தில் அரசு பராமரிப்பு செய்ய ஒரு வருடத்திற்கு 16 லட்ச ரூபாய் தான் செலவு ஆகியுள்ளது. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி 8 வருடத்திற்கு டெண்டர் கொடுக்கபட்டுள்ளது. ஒரு முறை கழிப்பறையை சுத்தம் செய்ய 363 ரூபாய் செலவு நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ள மக்கள் டெண்டரை ரத்து செய்து மாநகராட்சியே சுத்தம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.