திமுகவினரை சுளீர் கேள்வி கேட்ட பெண்.! திணறிய நின்ற திமுக மா.செ.வும், எம்.எல்.ஏ-வும்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூரில் கேள்வி கேட்ட பெண்ணை திமுகவினர் மிரட்டி அறுவறுக்கதக்க வார்த்தைகளால் திட்டித்தீர்த்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் கொந்தளித்து திமுகவினரை கேள்விகளால் துளைத்தெடுத்தது ஏன்? நடந்தது என்ன விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பொதுமக்களை இன்னலுக்கு உள்ளாக்கி விளம்பரம் தேடி பட்டாசு வெடித்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட திமுகவினரை இளம் பெண் ஒருவர் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காட்சிகள் தான் இவை..!

திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தின் திமுக செயலாளராக இருந்த ரமேஷ்ராஜுக்கு மாவட்ட செயலாளர்  பதவி வழங்கப்பட்டதை அடுத்து புதிய மாவட்ட செயலாளரின் அறிமுக கூட்ட விழா நடைபெற்றது.  விழா-வை முன்னிட்டு சீத்தஞ்சேரி பகுதியில் ஏராளமான திமுகவினர் திரண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பட்டாசுகளை வெடிக்க செய்தும், வாகனங்களை மறித்தவாறு கார்களில் அணிவகுத்து சென்றும் அலப்பறையில் ஈடுபட்டனர்.

அலப்பறையின் ஒரு பகுதியாக புதிய மாவட்ட செயலாளர் எம்.கே.பி ரமேஷ்ராஜ் மற்றும் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் கூட்டத்தை திரட்டிகொண்டு அங்கிருந்த பொதுமக்களுக்கு இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக தெரிகிறது.

அப்போது அங்கிருந்த பேக்கரி கடைக்குள் நுழைத்தவர்கள் அருகே நின்றுக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் துண்டு பிரசுரத்தை நீட்ட, அதனை வாங்க மறுத்த இளம்பெண் திமுகவினரை நோக்கி சரமாறி கேள்வி எழுப்பினர்.

வயதானவர்கள், குழந்தைகள் சாலையில் நடமாடுவதை கூட பொருட்படுத்தாமல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படித்தான் பட்டாசு வெடிப்பீர்களா என்றும் மக்களின் உயிருக்கு மதிப்பில்லையா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அதிரடி காட்டினார் இளம்பெண்.

இளம் பெண்ணின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் திமுக மாவட்ட செயலாளர் எம்.கே.பி ரமேஷ்ராஜ்ஜும், எம்.எல்.ஏ கோவிந்தராஜ்ஜும் விழிபிதுங்கி நிற்க, இளம் பெண்ணை பேச விடாமல் அங்கிருந்த திமுகவினர் மிரட்டி அடக்கிய காட்சிகளும், இந்த சம்பவத்தையெல்லாம் செல்போனில் படமெடுத்துக்கொண்டிருந்த நபரை திமுகவினர் தடுக்க முயன்ற காட்சிகளும் வீடியோவில் தெள்ளத்தெளிவாக பதிவாகியுள்ளது.

இதையடுத்து பொதுமக்களின் எதிர்ப்பை சாமாளிக்க முடியாமல் திமுக மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ-வும் அங்கிருந்து சைலண்ட்-ஆக எஸ்கேப் ஆகினர். ஆனால் அங்கிருந்த திமுக நிர்வாகி ஒருவர் கேள்விக்கேட்ட இளம் பெண்ணை பட்டாசு வெடிப்பது கண்ணுக்கு தெரியவில்லையா? என கேட்டு அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டித்தீர்த்தது திமுகவினரின் பிறவி குணமான அராஜக போக்கை பட்டவர்த்தனப்படுத்தியது.

ஆனால் திமுகவினரின் அநாகரீக அறுவறுக்கதக்க வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், தான் ஒரு அரசு அதிகாரி என்றும் எஃப் ஐ ஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்றும் கோபத்தில் ஆக்ரோஷமாக கொந்தளித்தார் இளம் பெண்.

பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் நியாயமான கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமலும், குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்க மறுத்து திமுகவினர் அப்பெண்ணையே அறுவறுக்கதக்க வார்த்தைகளால் திட்டித்தீர்த்து ஆணவப்போக்கில் நடந்துக்கொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிள்ளது. அதுமட்டுமின்றி பொது இடத்தில் பெண் என்றும் பாராமல் திமுக-வின் அத்துமீறி நடந்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுகவினரின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண் தன்னை அரசு அதிகாரி என கூறும் நிலையில் அரசு அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலையை எண்ணிப்பார்க்கவே வேதனையாக உள்ளது..!

இது ஒருபக்கம் என்றால் மாவட்ட செயலாளருடன் யார் முந்திக்கொண்டு செல்வது என்ற போட்டியில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டு நடுரோட்டிலேயே அசிங்கமாக சண்டையிட்டுக்கொண்டு முட்டி மோதியதன் காட்சிகள் மக்களை பெரும் முகசுழிப்புக்கு ஆளாக்கியது.

Night
Day