திமுகவின் வாக்குறுதி நாடகம்... அரசு ஊழியர்களை நம்பவைத்து ஏமாற்றிய ஸ்டாலின்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்களித்துவிட்டு தற்போது 4 ஆண்டுகள் கழித்து அதுகுறித்து ஆராய குழு அமைப்பதாக விளம்பர திமுக முதலமைச்சர் அறிவித்திருப்பது அரசு ஊழியர்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியுள்ள நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலம்.. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துகிறோம் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சி முடியப்போகும் தருவாயில் வல்லுநர் குழு என்ற பேரில் அரசு ஊழியர்களுக்கு கல்தா கொடுத்திருக்கிறது விளம்பர திமுக அரசு..!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய அரசு ஊழியர்களின் போராட்டகளத்துக்கே நேரடியாக சென்று நீலிக்கண்ணீர் வடித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் பதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக  நடைமுறைப்படுத்துவோம் என நரம்பு புடைக்க பேசி கபடநாடகம் ஆடியதை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. 

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த திமுகவின் இந்த நாடகத்தை நம்பி, 2021 தேர்தலில் அரசு ஊழியர், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என மொத்தம் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாரிச்சுருட்டி ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றியதா? என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடித்தது மட்டுமல்லாமல், வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இந்த விளம்பர திமுக அரசு காவல்துறையை ஏவி கட்டவிழ்த்த அடக்குமுறைகள் கொஞ்ச நஞ்சமல்ல..

இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு தடவை கூட பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் மௌனம் காத்து வந்த கபட வேடதாரி திமுக, தற்போது ஆட்சி முடியப்போகும் தருவாயில் அரசு ஊழியர்கள் மீது திடீர் அக்கறையை காட்டியிருப்பது முழுக்க முழுக்க தேர்தல் ஸ்டண்ட் என்றே விமர்சிக்கப்படுகிறது. அதாவது பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என இந்த மூன்றையும் ஆராய வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் எந்த ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துவது என வரும் செப்டம்பர் மாதம் முடிவு செய்யப்படும் எனவும் சட்டபேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் திமுக முதலமைச்சர் ஸ்டாலின். 

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என 2021 சட்டமன்ற தேர்தலின் போது வாய்நிறைய வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது எந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என குழு அமைத்து ஆராயும் திமுகவின் செயல் அகட்சியின் ஈனத்தனமான அரசியலை கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது. 

திமுகவின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரில் குழு அமைத்து, அக்குழு அறிக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் கொடுத்திருப்பது 2026 சட்டமன்ற தேர்தலிலும் அரசு ஊழியர்களை முட்டாளாக்கி அவர்களின் வாக்குகள் மீது ஆட்சி அதிகாரம் என்னும் அம்பாரியில் சவாரி செய்யும் திமுகவின் கேவலமான அரசியல் கணக்கே ஒளிந்திருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாத திமுக அரசு மீது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் அவர்களின் கோபம் திமுகவுக்கு 2026 தேர்தலில் சோகமாக மாறிவிட கூடாது என்ற ஒற்றை காரணத்திற்காகவே இந்த புதிய நாடகத்தை ஸ்டலின் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது நன்கு தெரிந்திருந்தும், பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்படும், அரசு ஊழியர்களுக்கான திருமன முன்பணம் 5 லட்சமாக உயர்த்தப்படும், பொங்கல் பண்டிகை பரிசு தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் போன்ற உப்புசப்பு இல்லாத அறிவிப்புகளை பிரதானமாக அறிவித்த ஸ்டாலின், இறுதியாக பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய குழு அமைப்பதாக அறிவித்திருக்கும் போக்கு அரசு ஊழியர்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியுள்ளது. திமுகவின் இந்த நாடகம் அரசு ஊழியர்களிடையே எடுபடாது என்ற நிலையில் 2026 தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் கொடுக்கப்போகும் சம்பட்டி அடியே அவர்களின் ஆட்சிக்கான சாவு மணி என்பதில் சற்றும் ஐயமில்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. 

Night
Day