எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுகவின் உட்கட்சி பூசல் தமிழக சட்டப்பேரவையிலேயே சந்தி சிரிக்கும் அளவுக்கு ஆனதை தொடர்ந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வாயை அடைக்க வேறுவிதமான அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார் விளம்பர திமுக முதல்வர் ஸ்டாலின்..! அப்படி என்ன அஸ்திரம் விரிவாக பார்க்கலாம்..!
கட்சியில் நான் எந்த அளவுக்கு ஓரங்கட்டப்பட்டிருக்கிறேன் என்ற ஆதங்கத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டபேரவையில் வைத்தே உடைத்து பேசியது உட்கட்சி பூசல் தலைவிரித்தாடும் திமுகவின் மேலிட முகங்கள் மீது கரியை பூசிய விதமாக இருந்தது.
எங்களிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை, யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் போய் கேளுங்கள் என சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களின் முன்னிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் திமுகவுக்கு சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரகம் என்ற அளவுக்கு இருந்தது. இப்படி சொந்த கட்சியான திமுக-வை தாக்கி பேசுவது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு இது ஒன்றும் முதல்முறை அல்ல.
கடந்த 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மிக முக்கிய துறையான நிதித்துறை பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பின் நாளில் அத்துறையில் இருந்து அவர் மாற்றப்பட்டது ஊரறிந்த ஒன்று. முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதியும், மருமகனான சபரீசனும் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துவிட்டதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ லீக் ஆனது தான் அவரது துறை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் திமுக PHD முடித்திருப்பது ஊர் அறிந்த ஒன்று என்றாலும் அக்கட்சியை சேர்ந்த அமைச்சரே ஆடியோ வடிவில் அதை வாக்குமூலமாக அளித்தது எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
அதுமட்டுமா.. UNFIT தத்திகளையெல்லாம் வைத்துக்கொண்டு வாரிசுக்காக கட்சி நடத்த பாத்தீங்கன்னா திமுக படுபாதாளத்தில் தள்ளப்படும் என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், படு ஓப்பனாக அட்வைஸ் கொடுத்தது திமுகவின் அரசியல் களத்தையே ஆட்டம் காண வைத்தது. திமுகவில் உதயநிதிக்கு அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தத்திகளை வைத்து வாரிசு அரசியலா? என்ற பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பேச்சு, திமுக மீதான எதிர்கட்சிகளின் வாரிசு அரசியல் விமர்சனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தூக்களாக இருந்தது.
இதையடுத்தே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கிராஃப் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து டம்மி அமைச்சராக சரிந்தது. இப்படி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒவ்வொரு முறை வாய் திறக்கும் போதெல்லாம் அது திமுகவுக்கே கன்னிவெடியாக மாறுவது தொடர்கதையாக நடந்து வந்த நிலையில் அவரிடன் வாயை அடக்க ஓப்பன் மேடையில் வைத்தே கெஞ்சாத குறையாக கெஞ்சியிருக்கிறார் விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின்.
திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்களின் வாழ்வே வரலாறு என்ற பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ஸ்டாலின், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சொல்லாற்றல் மிக்கவர் என புகழ்ந்த அதேநேரம் எதிர்கட்சிகளுக்கு உங்கள் சொல் அவலாக மாறிவிட கூடாது என அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அப்போது வழக்கம் போல முதலமைச்சரின் வாய் குளற ஆவளா.. அவலா என பதற்றத்தில் தட்டுத்தடுமாறியது இன்னும் பயிற்சி வேண்டும் என்றே சொல்லும் விதமாக இருந்தது.
அத்தோடு விட்டாரா? என் சொல்லைத் தட்டாத அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் நிச்சயம் புரிந்துக் கொள்வார் என நம்புகிறேன் என பேசியது படுத்தே விட்டானய்யா என்ற அளவுக்கு இருந்தது. இப்படி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வாயை அடைக்க விளம்பர முதலமைச்சர் பட்டபாட்டை பார்த்தாலே பரிதாபமாக இருந்தது. அதுவும் திமுகவின் வரிசு அரசியலை கிழித்து தொங்கவிட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மேடையில் வைத்துக்கொண்டே வாரிசு அசியல் பற்றி ஸ்டாலின் பெருமிதத்தோடு பேசிய காட்சிகள் உச்சகட்ட காமெடி.
திமுகவின் முகத்திரையை அவ்வப்போது அம்பலப்படுத்தி வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கட்சியில் இருந்து ஓரங்கட்டினால் அடங்கிவிடுவார் என திமுக போட்ட கணக்கு பொய்யானதை தொடர்ந்து தற்போது அவரின் வாயை அடைக்க புது ஸ்டண்டை ஸ்டாலின் கையாண்டிருக்கும் நிலையில் அதுவாவது அவருக்கு கைகொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!