திமுக ஆட்சியில் இப்படியும் நடக்கும்! நிலத்தை அபகரிக்க புல்டோசர் டெக்னிக்!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வடபழனியில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடித்து தள்ளி திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவின் பேரில் அரங்கேற்றப்பட்ட அராஜகத்தால் வயதான தம்பதி வாழ்வாதாரத்தை இழந்து நிற்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுகவின் அராஜகத்துக்கு போலீசும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் பின்னணி என்ன? - விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..!

நிலத்தை அபகரிப்பதற்காக ஆளும் கட்சி என்ற ஆணவத்தில் மெஸ் நடத்தி பிழைப்பு நடத்தியவரின் வாழ்வாதாரத்தை ஜேசிபி மூலம் சிதைத்த திமுக அராஜக கும்பலின் அட்டூய காட்சிகள் தான் இது.!

சென்னை வடபழனி குமரன் காலனி பகுதியில் ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குத்தகை அடிப்படையில் ஷெட் அமைத்து மெஸ் நடத்தி வந்தவர் தான் பால்ராஜ். கடந்த 2008ம் ஆண்டு அந்த இடத்தை பால்ராஜ், ஜனார்த்தனனிடம் இருந்து விலைபேசி, குறிப்பிட்ட தொகையை கொடுத்து இடத்தை கிரையம் செய்வதற்கான SALE DEED AGREEMENT-ம் கையெழுத்தானதாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு ஜனார்த்தனன் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தான் நிலத்துக்கு உரிமை கோரி பால்ராஜுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியிருக்கிறது திமுக அராஜக கும்பல். 

உயிரிழந்த ஜனார்த்தனனை போலியாக உருவாக்கி இடத்தை காலி செய்ய கூறி பால்ராஜுக்கு தொடர் மிரட்டல் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் 2012ம் ஆண்டு நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார் பால்ராஜ். நான் தான் ஜானார்த்தனன் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டு, நிலத்தை கிரையம் செய்ய தான் செலுத்திய தொகையை திருப்பி கொடுத்துவிட்டால் இடத்தை காலி செய்ய தயார் என பால்ராஜ் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் இன்று வரை அதை நிரூபிக்க முடியாமல் வழக்கு கிடப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட இடத்தின் மதிப்பு சுமார் 5 கோடியை தாண்டும் என கூறப்படும் நிலையில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிலத்தை அபகரிக்க திமுகவினர் தொடர் அராஜகத்தை கட்டவிழ்த்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் பால்ராஜ். விருகம்பாக்கம் திமுக எம்.எல்.ஏ-வும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜாவின் மகனுமான பிரபாகர் ராஜா-வின் ஆதரவாளர்கள் என கூறிக்கொண்டு, திமுக வட்ட துணைச் செயலாளர் சூர்யா சிவகுமார் மற்றும் மாவட்ட பிரதிநிதி சாரதி சீனிவாசன் ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர் பால்ராஜ் தம்பதியினர். 

இடத்துக்கான மின்சாரத்தை துண்டித்து அராஜகம் செய்த ஆளும் திமுக கும்பல், அனைத்துக்கும் நீட்சியாக புல்டோசர் வாகனத்தை வாடகைக்கு எடுத்துச்சென்று பால்ராஜின் வாழ்வாதாரமான மெஸ்ஸை இடித்து தள்ளி சூரையாடியிருக்கிறது. பிரச்சனைக்குரிய இடத்தை உரிமை கோருவதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க, ஆளும் கட்சி என்ற ஆணவத்தில் மின்சாரத்தை துண்டித்தது மட்டுமின்றி புல்டோசரை கொண்டு மெஸ்ஸை இடித்து தள்ளியது வயதான தம்பதியரை நிலைகுலைய செய்துள்ளது.

இது குறித்து புகார் கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டதோடு தங்கள் கடமையை முடித்துக்கொண்ட விருகம்பாக்கம் போலீசார், FIR கூட பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்டவரையே அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நிலஅபகரிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் இப்படி அப்பட்டமாக எந்தவித ஆவணங்களோ, மாநகராட்சியின் அனுமதியோ இல்லாமல் இடத்தை திமுகவினர் புல்டோசர் மூலம் இடித்து தள்ளி அட்டூழியத்தை அரங்கேற்றியிருப்பை பார்க்கும் போது தமிழ்நாட்டில் சாமானிய மக்களுக்கு துளியும் பாதுகாப்பே இல்லை என்ற பயமே ஏற்படுகிறது.

Night
Day