எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக ஆய்வுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகளுக்கு மது உடன் கூடிய அசைவ விருந்து அளிக்கப்பட்டதன் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் திமுகவின் போக்கு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்...
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் நாளும் நடக்கும் கொலைகளால் ஒருபக்கம் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்க மறுபக்கம் தமிழகத்தில் சாராயம் ஆராய் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு சாட்சி தேவையில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு திமுக சார்பில் அளிக்கப்பட்ட மதுவுடன் கூடிய அசைவ விருந்தின் காட்சிகள் தான் இவை.
சந்தப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தான் இப்படியொரு அக்கிரமம் அரங்கேறியுள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கலந்துக் கொண்ட நிலையில் கூட்டம் முடிந்து அளிக்கப்பட்ட அசைவ விருந்தில் சாப்பாட்டு பந்தியில் ஒவ்வோரு இலைக்கும் கூட்டு பொறியலுடன் சேர்த்து பீர் பாட்டிலும் வைக்கப்பட்டு மது உடன் கூடிய விருந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ மேடைக்கு மேடை மது ஒழிப்பு குறித்து வாய் கிழிய பேசி நாடகம் ஆடி வரும் விளம்பர திமுகவின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறது.
தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாகவும், இளைஞர்களின் குடிப்பழக்கம், மதுவுக்கு அடிமையாகும் நிலை அதிகரித்துக் கொண்டே போவதாகவும், அதைப்பற்றியெல்லாம் அரசுக்கு அக்கறை இல்லை, கவலை இல்லை என எதுமை மோனையில் கடந்த காலத்தில் வசனம் பேசினார் விளம்பர திமுகவின் முதல்வரின் சகோதரியும் எம்.பியுமான அம்மையார் கனிமொழி. இப்போது திமுகவின் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு மதுவை ஊத்தி கொடுத்திருப்பது தேர்தல் வெற்றிக்காக திமுக போடும் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக முகம் சுளிக்கின்றனர் மக்கள்.
அதுமட்டுமா.. தமிழகத்தில் போதை அதிகரித்துவிட்டதாகவும் கள்ளச்சாராய பலிகள், பள்ளி மாணவர்களின் கைகளுக்கே எட்டும் தூரத்தில் போதை வஸ்துக்களில் புழலிடமாக தமிழக மாறிவிட்டதாகவும் சர்ச்சைகள் எழும்போதெல்லாம் அதை மடை மாற்ற இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ சூட் நடத்தி வருகிறார் திமுக முதல்வர் ஸ்டாலின். இந்தநிலையில் போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என பள்ளி மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் மன்றாடி கேட்டுக்கொள்வதாக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ-வையும் தற்போது வெளியாகியிருக்கும் திமுக நிகழ்ச்சியில் மதுவிருந்து அளிக்கப்பட்டதன் வீடியோவையும் பார்க்கும் போது மாட்டிகினாரு ஒர்த்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு என்றே பாடத்தோன்றுகிறது.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போதே, போதை புழக்கத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ வெளியிட்ட திமுக விளம்பர முதல்வர் ஸ்டாலினின் மக்களை ஏமாற்றும் மோசடித்தனம் இந்த வீடியோவால் அம்பலப்பட்டு நிற்கிறது.
திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என வாரிசு அரசியல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்க, அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு, கூட்டம் போடவும் கோஷம் எழுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாக முன்வைக்கப்படும் விமர்சனத்துக்கும் இதை விட வேறு சான்று வேண்டியதில்லை.
இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளில் மது விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவின் கட்சி நிகழ்ச்சியில் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு பகிரங்கமாகவே மது விநியோகிக்கப்பட்டுள்ளது ஆளும் கட்சி என்ற ஆணவத்தின் உச்சமாக உள்ளது. இப்படி தமிழக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கி வரும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பது உறுதி என்றே சொல்லப்படுகிறது.