எழுத்தின் அளவு: அ+ அ- அ
50 கோடி ரூபாய் எனச் சொல்லி வைரலான நாயின் உண்மையான விலையைச் சொல்லி அமலாக்கத் துறை சோதனையில் சரணடைந்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்.. என்ன நடந்தது பார்க்கலாம் விரிவாக..!
ஓநாய் மற்றும் காக்கேஷியன் ஷெப்பர்ட் DOG-ன் கிராஸ் பிரீட் விலை 50 கோடி ரூபாய் என நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்தவர் தான் இன்று அத்தனையும் பொய்யா கோபால் என்ற காலாய்க்கு ஆளாகியிருக்கிறார்..
இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாகி பணம் சம்பாதிப்பதற்காகப் பலரும் வெவ்வேறு வழிகளில் முயல்கின்றனர். அந்தவகையில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 50 கோடி ரூபாய் நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கியிருப்பதாக கூறி பின் அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சதீஷ். இவர் விலை உயர்ந்த நாய்களை வாங்கி அவற்றை வளர்த்து பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்சென்று அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நாயை வாங்கியிருப்பதாகவும் அது ஓநாய்க்கும் காக்கேஷியன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய்க்கும் இடையேயன கலப்பின நாய் என கூறி அதன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார் சதீஷ்.
மேலும் உலகிலேயே விலை உயர்ந்த நாயின் சொந்தக்காரர் என்றும் தனக்கு தானே மகுடமும் சூட்டிக்கொண்டார் சதீஷ். இது இன்ஸ்டாகிராம், யூடியூப் என படு வைரலான நிலையில் ஒரே நாளில் டிரெண்டிங் ஆனார்.
அதுமட்டுமா..பொது நிகழ்ச்சியில் 50 கோடி ரூபாய் என மதிப்பு என கூறப்பட்ட நாயுடன் சதீஷ் RAMP WALK வந்த வீடியோக்களும் புகைப்படங்களும் அடுத்தடுத்து இணையத்தில் தீயாய் பரவின..
இப்படி சமூகவலைதளம் மூலம் கிடைத்த பிரபலத்தால் நாயுடன் கெத்தாக நிகழ்ச்சியில் பங்கேற்பதையே மெயின் பிசினஸாக கொண்டிருந்த சதீஷுக்கு பணம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது. அதாவது 30 நிமிட நிகழ்ச்சிக்கு இரண்டரை லட்சமும், அதற்கு மேல் நிகழ்ச்சி நடந்தால் 10 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலித்து வந்தார் சதீஷ். அதுமட்டுமா.. தன்னை பெரும் பணக்காரர் என காட்டிக்கொண்ட சதீஷ், தன்னிடம் 150-க்கும் மேற்பட்ட உலகின் விலை உயர்ந்த நாய்கள் இருப்பதாகவும் அதற்கென 7 ஏக்கரில் பண்ணை அமைத்து சிசிடிவி, பவுன்சர்கள் என HITECH முறையில் பராமரித்து வருவதாகவும் தான் ஒரு செல்வ சீமான் என்பது போல பேட்டி என்ற பேரில் அவரே வாக்குமூலம் அளித்தது தற்போது அவருக்கே BACKFIRE ஆகியிருக்கிறது.
50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய விவகாரத்தில் அந்நிய செலாவணி விதிகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக துரும்பு ஈ.டி.-யின் கண்களை உருத்த, சதீஷின் கதவை தட்டியிருக்கின்றனர் அதிகாரிகள். தொழிலதிபரின் சதீஷின் வங்கி கணக்குகளையும் ஆவணங்களையும் ஈ.டி. அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்திய போது தான் 50 கோடிக்கு நாய் வாங்கும் அளவுக்கு சதீஷ் வசதியானவர் இல்லை என்பதும் புகைப்படத்தில் இருந்த நாயின் மதிப்பும் ஒரு லட்சத்தை கூட தாண்டாது என்பதும் தெரியவந்தது.
50 கோடி கொடுத்து நாய் வாங்கும் அளவுக்கு எங்கிருந்து பணம் வந்தது, கருப்புப் பணமா? ஹவாலாவா? எனப் பல மணி நேரமாக அமலாக்கத்துறை நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையை தாக்குபிடிக்க முடியாமல் ஐயோ இது உள்ளூர் நாய் தாங்க என்ற உண்மையைச் சொல்லி சரணடைந்திருக்கிறார் சதீஷ்.
இதையடுத்து நீ டம்மி பீசா டா என்ற ரேஞ்சுக்கு அமலாக்கத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இறுதியில் வெற்று விளம்பரத்துக்காக தொழிலதிபர் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டது தான் மிச்சம்.