நிதியும் இல்லை... அதிகாரமும் இல்லை! ஆதங்கத்தை கக்கிய PTR...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த கேள்விக்கு, எங்களிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாகப் பதிலளித்திருப்பது தான் தமிழக அரசியல் வட்டாரத்தின் லேடஸ்ட் ஹாட் டாப்பிக்கே..! இது குறித்த தொகுப்பை காண்போம்...

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வியத்தகு சாதனை படைத்த தமிழகம்..! மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப புரட்சி..! தெற்காசியாவின் மிகச்சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப மையம் தமிழகம், என்றெல்லாம் பெருமை பீத்திக்கொள்ளும் திமுக அரசுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த தொழில்துறை அமைச்சரே குற்றச்சட்டை முன்வைத்திருப்பது கரடியே காரி துப்பிய MOVEMENT-ஆக உள்ளது..

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து கொடுக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தான் எங்களிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என உட்கட்சி பூசலை சட்டபேரவையில் வைத்தே அரங்கேற்றம் செய்திருக்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

அத்தோடு நிற்கவில்லை, யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார், எங்களிடம் அது இல்லை" என முதலமைச்சர் ஸ்டாலினையே பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மறைமுகமாக தாக்கி பேசியது தான் வேற லெவல்.

அதோடாவது விட்டாரா? டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவைகள் தொழில்துறை வசம் இருக்கும் அசாதாரண நிலையே 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்வதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறேன் என்ற பேரில் திமுகவின் உட்கட்சி மோதலை தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே முத்திரையாக பதித்த பி.டி.ஆரின் செயல் அடிபொளி ரகம்.

2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மிக முக்கிய துறையான நிதித்துறை பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பின் நாளில் அத்துறையில் இருந்து அவர் மாற்றப்பட்டது ஊறரிந்த ஒன்று. முதல்வர் ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதியும், மருமகனான சபரீசனும் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துவிட்டதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ லீக் ஆனது தான் அவரது துறை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் திமுக PHD முடித்திருப்பது ஊர் அறிந்த ஒன்று என்றாலும் அக்கட்சியை சேர்ந்த அமைச்சரே ஆடியோ வடிவில் அதை வாக்குமூலமாக அளித்தது எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. ஆனால் தடாலடியாக பி.டி.ஆர்-ஐ நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் அவரின் ஆடியோ வாக்குமூலத்தை திமுக மேலிடமே ஒப்புக்கொள்வது போல ஆகிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டார் பி.டி.ஆர். 

இந்தநிலையில் தான் தனது துறைக்கு நிதியும் ஒதுக்கப்படுவதில்லை, துறையை வளர்ப்பதற்கான அதிகாரமும் இல்லை என உட்கட்சி பூசலை உண்மையை உடைத்து பேசியிருக்கிறார் பி.டி.ஆர். இதற்கெல்லாம் ஹைலைட்டாக இருந்து சபாநாயகர் அப்பாவு-வின் பேச்சு. உள்ளூக்குள்ள பேச வேண்டிய விவகாரத்தை இப்படி வெளிப்படையாகவா? பேசுவீங்க என திமுகவின் உட்கட்சி மோதல் சட்டப்பேரவையிலேயே சந்தி சிரிக்கும் அளவுக்கு ஆனதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பி.டி.ஆருக்கு சபாநாயகர் அப்பாவு அட்வைஸ் கொடுத்தது வேற ரகமாக இருந்தது.  

சபாநாயகர், கட்சி சார்பற்றவராக நடந்துகொள்ள வேண்டும் என்ற நிலையில் சட்டப்பேரவையில் பல விவகாரங்களில் திமுகவின் மவுத் பீசாக சபாநாயகர் செயல்படுவதாக ஏற்கெனவே அப்பாவு மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில் பிடிஆர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முந்திக்கொண்டு பி.டி.ஆருக்கு அட்வைஸ் செய்திருப்பது சபாநாயகர் வேலையை காட்டிலும் திமுகவுக்கு முட்டு கொடுக்கும் வேலையை அப்பாவு சிறப்பாக செய்வதாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. 

பி.டி.ஆரின் பேச்சு திமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை அம்பலப்படுத்திய அதேநேரம், தமிழகத்தில் எந்த லட்சணத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி உள்ளது என்பதற்கு சிறந்த சான்றாகவும் உள்ளது. நாட்டின் எதிர்காலமே தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியில் தான் உள்ளது என்ற நிலையில் திமுகவின் உட்கட்சி மோதலுக்காக தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியே சிதைப்பட்டு வருது பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. ஒருபக்கம் திராணியற்ற திமுகவின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்க மறுபக்கம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக மக்களை பகடை காயாக உருட்டி விளையாடும் திமுகவின் போக்கு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day