எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 108ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 108-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா போயஸ்கார்டன், 'ஜெயலலிதா இல்லத்தில்' அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர்ந்திட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காட்டிய அதே வழியில், மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, புரட்சித் தலைவரின் பிறந்தநாளினை சிறப்புடன் கொண்டாடுவோம் -
இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.