பொன்முடி மீது ஸ்டாலின் ஆக்ஷன்...! பின்னணியில் உள்ள secret என்ன!!

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் SECRET AGENDA இருப்பதாக தகவல் கசிந்துள்ளது..! அது குறித்து விரிவாக பார்க்கலாம்...

பெண்களையும், பொதுமக்களையும் கொச்சையாகவும் இழிவுப்படுத்தியும் பேசுவது திமுகவினருக்கு இது ஒன்றும் முதல் முறை அல்ல. பெண்கள் பயணிக்கும் இலவச பேருந்துகளை ஓசி பேருந்து என கிண்டலடித்தது, மனு கொடுக்க வந்த பெண்ணிடம் சாதியை சுட்டிக் காட்டிப் பேசியது என பொன்முடியின் சர்சசை பேச்சுகளை லிஸ்ட் போட்டால் ADDITIONAL PAPER வாங்கும் அளவுக்கு நீண்டு கொண்டே போகும். அப்போதெல்லாம் அவரது பேச்சுக்கு எந்த கண்டனமும் தெரிவிக்காத ஸ்டாலின், சினியர் மோஸ்ட் அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்களால் ஏற்படும் பின்விளைவுகளை மறைமுகமாக குறிப்பிட்டு, இன்னைக்கு என்ன பிரச்சனைய கிளப்பி இருப்பாங்களோ என்ற பயத்திலேயே ஒவ்வொரு நாள் பொழுதும் விடிவதாக பேசியிருந்தது ஊரறிந்த ஒன்று.  

அதிலும் கழகத்துக்கு பெருமை தேடி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஏடா கூடமாக பேசி சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் என பொதுமேடையில் வைத்தே சினியர் மோஸ்ட் அமைச்சர்களிடம் கெஞ்சாத குறையாக ஸ்டாலின் பேசிய காட்சிகளும் அரங்கேறியது. 

திமுகவில் ஸ்டாலினை தாண்டி மூத்த அமைச்சர்களான பொன்முடி, துரைமுருகன், கே.என்.நேரு போன்றவர்களின் ஆதிக்கம் என்பது அதிகமாகவே இருக்கும். இவர்கள் ஸ்டாலினுக்கு கூட கட்டுப்பட மாட்டார்கள் என்பது தான் திமுகவில் நிலவும் நிதர்சனமான உண்மை. இதற்கு திமுக நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த்-ன் பகிரங்க பேச்சே சாட்சி என்று கூட சொல்லலாம். பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை ஓல்ட் ஸ்டூடெண்ட் என குறிப்பிட்ட ரஜினிகாந்த், அவர்களை எல்லாம் சமாளிக்கவே முடியாது என்று உடைத்து பேசியது திமுக எந்த அளவுக்கு கட்டுக்கோப்பான கட்சி என்பதை உணர்த்தியிருந்தது. 

இப்படி இருக்கையில் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு செத்து சுன்னாம்பாகி ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி-க்கு வறிந்துக்கட்டிக்கொண்டு தொட்டுப்பார், சீண்டிப்பார் என மத்திய அரசுக்கு சவால் விட்டு வீரவசனம் பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார் ஸ்டாலின். ஒரு ஊழல்வாதிக்கு முதல்வரே பறிந்து பேசுவதா? என்றெல்லாம் விமர்சனங்களை எழுப்பியது.

இந்தநிலையில் சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஈ.டி.ரெய்டில் சிக்கி சிதைப்பட்டு கிடக்க, ஸ்டாலின் குறைந்தபட்சம் கண்டனத்தை கூட பதிவு செய்யாதது திமுக கூடாரத்திலேயே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதுவும் ஐந்து கட்சி தாவிய செந்தில் பாலாஜிக்கே வீரவசனம் பேசிய ஸ்டாலின் சீனியர் மோஸ்ட் வரிசையில் இருக்கும் நேரு விஷயத்தில் ஒப்புக்கு கூட ஈ.டி-யை கண்டிக்காமல் விட்டுவிட்டது ஏன்? என்ற கேள்வி திமுகவின் மேலிட INNER CIRCLE-ல் ஓங்கி ஒலித்து வருகிறது.  

இந்நிலையில் தான் மேலும் ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது அமைச்சர் பொன்முடி மீதான ஸ்டாலின் ஆக்‌ஷன். ஆபாச பேச்சுகளால் என்னை சிக்கலில் சிக்க வைக்காதீர்கள் என மேடையிலேயே கெஞ்சியவர், தன் கைப்படவே பொன்முடியின் கட்சிப்பதவியை காலி செய்திருப்பது திமுக வட்டாரத்தில் ஷாக்கை கொடுத்திருக்கிறது. பொதுச்செயலாளரை தாண்டி ஸ்டாலினே நேரடியாக இறங்கி பொன்முடி மீது நடவடிக்கை எடுத்தது துரைமுருகனையும் ஆட்டம் காண வைத்தது. இதன் எதிரொலியே ஓடோடி வந்து தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் துரைமுருகன். 

இந்தநிலையில் தான் சர்ச்சை பேச்சை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஸ்டாலின் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இப்படி கட்சியின் சீனியர் மோஸ்டுகள் அடுத்தடுத்து குறிவைக்கப்படுவதன் பின்னணியில் செல்ல மகனை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் அஜெண்டாவே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மகனை முதலமைச்சராக்க இந்த சீனியர் மோஸ்ட்-கள் தடையாக இருக்க கூடாது என்பதற்காகவே அவர்களை ஓரங்கட்டும் நடவடிக்கையில் ஸ்டாலின் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் தான் வகிக்கும் துறையின் மானிய கோரிக்கையை கூட தாக்கல் செய்ய வராத திமுக அமைச்சர் உதயநிதி, எவ்வளவோ மக்கள் பிரச்சனை இருக்க, மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து ஃபார்முலா 4 கார் பந்தையத்தை நடத்தியதன் பின்னணி அனைவருக்கும் தெரிந்ததே. இப்படியிருக்கையில் உதயநிதியை முதலமைச்சர் ஆக்கினால் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழ்நாடு மக்களின் கண்ணீரால் மயானக்காடாக மாறுவது உறுதி என்றே சொல்ல வேண்டும். 

Night
Day