மயிலாடுதுறையில் இரண்டு இளைஞர்கள் படுகொலை - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்து வந்தவர்களை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்த அராஜக செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், இதனை தடுக்கத் தவறிய திமுக விளம்பர அரசுக்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அடுத்த முட்டம் பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்து வந்தவர்களை, தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று  தெரிவித்துள்ளார். இந்த அராஜக செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை தடுக்கத் தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு, ஒரு சில தினங்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தவுடன் மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை, தட்டிக் கேட்ட இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற படுபாதக செயலில் ஈடுபட எங்கிருந்து துணிச்சல் வருகிறது?- திமுக தலைமையிலான அரசு இந்த சாராய விற்பனையை முன்கூட்டியே தடுத்து இருந்தால் இன்றைக்கு இந்த இளைஞர்களின் உயிர் பறிபோயிருக்காது. இந்த விளம்பர அரசின் அஜாக்கிரதையால், தவறு இழைப்பவர்களை கண்டும் காணாமல் விட்டதால் தான் இந்த உயிரிழப்பு இப்போது நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இளைஞர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சி த்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என நாள்தோறும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் இந்த கையாளாகாத அரசின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விளம்பர திமுக ஆட்சியின் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்களை விடுவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day