எழுத்தின் அளவு: அ+ அ- அ
2025-2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
Voice Over....
குடிசைகள் இல்லா இந்தியாவை உருவாக்கும் முனைப்பில் பிரதமர் மோடியின் அரசு கட்டுமானத்துறையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வாறு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம்.
இந்த திட்டம் நகர்ப்புற மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் மற்றும் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் வீடு கட்டும் திட்டம் என இரண்டு அம்சங்களை கொண்டுள்ளது.
நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள், 6 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 6.5% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள், 6 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். அவர்களுக்கும் கடன் தொகையில் 6.5% வட்டி மானியம் கிடைக்கும்.
அதேபோல், 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள், 9 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 4% வட்டி மானியம் கிடைக்கும். 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் 12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 3% வட்டி மானியம் கிடைக்கும்.
அதே போல கிராம பகுதிகளில் வீடில்லாத மக்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பத்து லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
byte... சேதுராமன் பொருளாதார நிபுணர்
இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளாகவே கிராமப்புறங்களில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் கான்கீரிட் வீட்டிற்கு மாறி வருவது உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில், கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
byte... கோபால கிருஷ்ணன் பொருளாதார நிபுணர்
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மோடி அரசின் 3.0 வின் முதல் பட்ஜெட், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பொது மக்களுக்கு தேவையான பல்வேறு நல திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.