மாற்றுத்திறனாளிகள் மீது திடீர் கரிசனம்! விளம்பர முதல்வர் பாசாங்கு நாடகம்!

எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் குறித்து ஒப்புக்குகூட வாய் திறக்காத விளம்பர திமுக முதலமைச்சர் திடீர் ஞானோதயம் வந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் வாய்ப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றியிருப்பதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்..!

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்த இதே திமுக அரசு தான் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் வாய்ப்பு என்னும் நாடகத்தை நடத்தியிருக்கிறது...

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளும் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளும் நீண்டநாட்களாகவே பலக்கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருவது ஊரறிந்த ஒன்று. 
ஆனால் தங்களின் வாழ்வாதார அடிப்படைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபடும் போதெல்லாம் ஏவல் துறையான காவல்துறையை அவர்கள் மீது ஏவி அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதை விளம்பர திமுக அரசு வாடிக்கையாகவே செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ரேஸ் கோர்ஸ் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பெண்மாற்றுத்திறனாளிகளின் ஆடைகளை கிழித்து அரங்கேற்றப்பட்ட மூர்கத்தனமாக அடக்குமுறை கடும் கண்டத்துக்கு ஆளாகியிருந்ததை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க வாய்ப்பில்லை.

வெயில் மழை என தங்களது உரிமைக்காகவும் அடிப்படை வாழ்வாதாரத்திற்காகவும் மாற்றுத்திறனாளிகள் போராடி வருவது குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன் என திமுக அமைச்சர் கீதா ஜீவன் கூறியது எந்த அளவுக்கு மாற்றுத்திறனாளிகள் மீது இந்த விளம்பர அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு சாட்சியாக இருந்தது. 

கடந்த 4 ஆண்டுகளில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை அலுவலகத்தின் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபடாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தான் அவர்களின் நிலைமை உள்ளது. இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத விளம்பர திமுகவின் முதலமைச்சர் தீடீரென அவர்கள் மீது அக்கறை மழையை பொழிந்திருப்பது ஏன் என்ற சந்தேக கேள்வியே எழுந்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருக்கிறார் விளம்பர முதல்வர் ஸ்டாலின்.

சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுகவின் மூத்த அமைச்சரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன் எதிர்கட்சிகளை கிண்டலடிப்பதாக நினைத்து மாற்றுத்திறனாளிகளை தாக்கிப்பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை மிகவும் கொச்சையாகவும் அறுவறுக்கதக்க வகையிலும் கேலி கிண்டலுக்கு ஆளாக்கி துரைமுருகன் பேசிய பேச்சுக்கள் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து துரைமுருகனை கண்டித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

தனது பேச்சு விபரீதமானதை உணர்ந்த துரைமுருகன் தாவி குதித்து வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனாலும் பொன்முடியின் ஆபாச பேச்சு எந்த அளவுக்கு திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோடு அதே அளவு பாதிப்பை மாற்றுத்திறனாளிகள் குறித்த துரைமுருகனின் பேச்சும் ஏற்படுத்தியிருந்ததே தற்போதைய திடீர் பாசத்துக்கு காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

துரைமுருகனின் பேச்சு மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது 2026 சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்காமல் இருக்கவே இந்த ஆட்சி அதிராக நாடகத்தை திமுக நடத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் என்ன கொடுமை என்றால் உதவித்தொகையை உயர்த்தக்கோரி சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க மறுபக்கம் சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளை தூக்கிக்பிடித்து திமுக பாசாங்கு நாடகம் நடத்தியது தான் உச்சகட்டம்.

Night
Day