மீண்டும் உயிர்தெழுந்த Game of Thrones ...விஞ்ஞானிகளின் குளோனிங் சாதனை..!

எழுத்தின் அளவு: அ+ அ-

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முழுவதுமாக அழிந்துபோன மோசமான ஓநாய்களை அதன் பழங்கால டிஎன்ஏவைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மீண்டும் உயிருடன் கொண்டு வந்துள்ளனர். 

பார்ப்பதற்கு கொஞ்சி விளையாட தூண்டும் வகையில் பொமேரியன் நாய் குட்டிகளை போல காட்சியளிக்கும் இந்த குட்டிகள் தான் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிக மோசமான ஓநாய் இனத்தில் மறு தோன்றல் என்றால் நம்பமுடிகிறதா..!

ஓநாய்கள் என்றால் THE LION KING படத்தில் வரும் ஓநாய் என்று எண்ணிவிட வேண்டாம்.. Game of Thrones படத்தில் வரும் மிக கொடூரமான பயங்கர ஓநாய் இனத்தை சேர்ந்தது தான் இந்த மறு தோன்றல் குட்டிகள். 

2021ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கோலோசால் பயோசயின்சஸ் (Colossal Biosciences) என்ற ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் தான் அதன் நீட்சியாக இப்படியொரு சாதனை படைத்து அசத்தியுள்ளனர்.

அதாவது சுமார் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமங்களான மிருகத்தின் பல் மற்றும் கிட்டதட்ட 72 ஆயிரம் ஆண்டுகள் முந்தை காலக்கட்டத்தை சேர்ந்த விலங்கின் எலும்பை கொண்டு அதன் டி.என்.ஏக்கள் மூலம் குளோனிங் முறையில் அழிந்த உயிரிழத்தை மீண்டும் உயிர்பித்து எழுப்பும் முயற்சியில் இறங்கினர் கோலோசால் பயோசயின்சஸ் விஞ்ஞானிகள். 

இந்த முயற்சியின் விளைவை பார்த்து விஞ்ஞானிகளே அதிர்ந்து போயினர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன பயங்கரமான ஓநாய் இனத்தை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தது தான் அந்த அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துக்கு காரணம். 2024 அக்டோபர் 1ம் தேதி குளோனிங் முறையில் பிறந்த இரண்டு ஓநாய் குட்டிகளும் ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

நவீன கால சாம்பல் ஓநாய்களைக் காட்டிலும் பண்டைய மோசமான ஓநாய்களாகளுக்கே உரித்தான தடிமனான தோள்கள், சற்று அகலமான தலை மற்றும் அடர்த்தியான கைகால்கள், பெரிய தாடைகள் கொண்டுள்ள இந்த இரண்டு ஆண் குட்டிகளும் பழங்கால பயங்கரமான ஓநாய் இனத்தை அப்படியே பிரதிபலிப்பது தான் ஆச்சரியமே. அதுவும் அவற்றின் குணாதசியங்கள் அனைத்தும் தற்போதைய சாம்பல் ஓநாய்களின் சுபாவங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்று 6 மாத குட்டியான ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் தற்போதே 36 கிலோ எடையுடன் இருப்பதாகவும் வளர வளர இதன் செயல்பாடுகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. 

இதையடுத்து அதே குளோனிங் முறையில் பெண் குட்டி ஒன்றையும் உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள், அதற்கு கலீஸி என பெயரிட்டு ஆண் குட்டிகளோடு சேர்த்து பராமரித்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் HIGH SECURITY-ன் கண்காணிப்பில் அவை பராமரிக்கப்பட்டு வருவதோடு இனப்பெருக்கம் செய்யும் முயற்சியிலும் இறங்க முடிவு செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.  

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன பயங்கரமாக விலங்கினத்தை மீண்டும் உயிர்த்தெழ செய்து வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திவிட்டதாக கோலோசால் பயோசயின்சஸ் விஞ்ஞானிகள் மார் தட்டி வரும் நிலையில் THE JURASSIC PARK படத்தில் டைனோசர்களை உயிர்த்தெழ செய்து பின் மனிதனுக்கே அது ஆபத்தாக முடிந்த கதையை போல இதுவும் மாறாமல் இருந்தால் சரி என்றே சொல்ல தோன்றுகிறது.

அதேநேரம் காலத்துக்கு ஏற்றவாறும் தட்பவெட்ப சூழலுக்கு தகுந்தாற் போலவும் பூமியில் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது .கிட்டத்தட்ட 143 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் Brachiosaurus என்ற டைனோசர் இனத்தை சேர்ந்த தாவர உண்ணியால் பசுமை காடுகள் அழிவுக்கு ஆளானதாகவும் அதை தொடர்ந்தே முட்களுடன் கூடிய தாவரங்கள் உருவாகி அழிவில் இருந்து தாவரங்களே தங்களை தற்காத்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இப்படியான சூழலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான உயிரினத்தை உயிர்ப்பிப்பது என்பதன் பின்னணியில் இருக்கும் ஆபத்துக்களையும் ஆராய வேண்டியதன் அவசியமும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.. 

Night
Day