விதிகளை மீறி வீடு கட்டிய திமுக நிர்வாகி... தகவலைப் பரப்பிய தொண்டருக்கு கொலை மிரட்டல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரியில் அரசு விதிமுறைகளை மீறி கோவிலைச் சுற்றி, திமுக ஒன்றிய செயலாளர் குடியிருப்புகளை கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த தகவலை பரப்பிய தொண்டனுக்கு, திமுக ஒன்றிய செயலாளர், கொலை மிரட்டல் விடுத்த ஆடியோவால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக செயல்பட்டு வருபவர் ஏ.எஸ்.சண்முகம். இவரது மனைவி மாது என்பவர், மாவட்ட கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நல்லம்பள்ளியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது பழமை வாய்ந்த சென்ராய பெருமாள் சாமி திருக்கோவில் உள்ளது. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து தமிழை வளர்க்கச் செய்த அதியமான் மன்னரால் கட்டப்பட்ட இந்தக் கோவில், நாட்டின் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  கோயிலின் முன்புறம் திருக்கோயில் முகப்பு தெரியாத அளவிற்கு சுவற்றை ஒட்டி நான்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு அதன் சுவற்றில் திமுக என எழுதியும், கலைஞர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் படங்களும் வரையப்பட்டுள்ளன. 

இது குறித்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு, கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பு வழங்கி ஓராண்டு ஆகியும் இதுவரை அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகத்தின் விதிமீறில்கள் குறித்து வாட்ஸ் அப், பேஸ்புக் முகநூல்களில் பகிரப்பட்ட தகவலை, திமுக தொண்டர் பெரியண்ணன் என்பவர் வாட்ஸ் அப்பில் உள்ள திமுக குரூப்பில் பார்வேர்ட் செய்து உள்ளார். அதனை அறிந்த ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம், பெரிய கண்ணனை தொலைபேசியில் அழைத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. 

மாவட்டத்தில் கொலை கொள்ளை கஞ்சா, சந்து கடை உள்ளிட்டவை அதிகரித்து வரும் நிலையில், திமுக பொறுப்பாளர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

Night
Day