எழுத்தின் அளவு: அ+ அ- அ
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து விமர்சனத்தை முன்வைத்ததற்காக சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு சிறுகுறு தொழில் முன்னேற்ற பேரவை தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பர திமுக அரசை விமர்சித்த ஒரே காரணத்திற்காக வீடு புகுந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் கொடூர காட்சிகள் தான் இவை..!
சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த திமுக அராஜக கும்பல் அவரது மனைவி மற்றும் சகோதரியின் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியதோடு, கொலைவெறி தாக்குதல் நடத்தியது திமுக அராஜக போக்கின் உச்சமாக உள்ளது.
தமிழ்நாடு சிறுகுறு தொழில் முன்னேற்ற பேரவையின் மாநில தலைவராக இருக்கும் சரவணன் சமீபத்தில் விளம்பர திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்து தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்ததாக தெரிகிறது. அதாவது பட்ஜெட்டில் சிறுகுறு தொழில் முனைவோரின் முன்னேற்றத்திற்கு எந்த ஒரு சலுகையோ மானியமோ அறிவிக்கப்படாதது குறித்து தனது ஆதங்கத்தை பேட்டி வாயிலாக சரவணன் வெளிப்படுத்தியதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் விளிம்பு நிலையில் இருப்பதாகவும் தொழில் முனைவோர் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனால் சிறுகுறு தொழில் முனைவோர்களை காப்பாற்ற விளம்பர திமுக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சங்கத்தில் தலைவர் என்ற முறையில் சரவணன் தங்களின் அவல நிலையை பேட்டியின் சுட்டிக்காட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் தான் திமுக ஆட்சியை விமர்சித்த ஒரே காரணத்திற்காக கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக அராஜக கும்பல் பெண்களின் மானத்தை விலையாக வைத்து விளையாடிய ஆட்டத்தின் காட்சிகள் மக்களின் பெரும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.
தொழில்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக வாய் நிறைய பொய் கூறி மக்களை ஏமாற்றி வரும் திராணியற்ற திமுக அரசுக்கு தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில் முற்றிலும் முடங்கி கிடப்பதை சரவணனின் பேட்டி தோலுரித்துக்காட்டியதன் ஆத்திரமே இந்த கொடூர தாக்குதலுக்கு முக்கிய காரணம்.
சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 158-வது வார்டு திமுக கவுன்சிலர் பாரதி மற்றும் அவரது கணவர் வெங்கடேஷன் தலைமையிலான திமுக ரவுடி கும்பல் சரவணனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியதோடு, அவரது மனைவி மற்றும் சகோதரியின் ஆடைகளை கிழித்து ஊரார் கண் முன்னே மானபங்கப்படுத்தியுள்ளது. இதில் சரவணனின் சகோதரி இருதயநோயாளி என்ற போதும் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று, அவரது மேலாடைகளை முற்றிலும் கிழித்து அரைநிர்வாணமாக்கி ஒரு உச்சபட்ச கொடூரத்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது அராஜக திமுக கும்பல்.
இதுகுறித்த புகாரை ஏற்க மறுத்த போலீசார், திமுகவால் கட்டவிழ்க்கப்பட்ட அராஜகத்தை வெளியே சொல்லக்கூடாது என தன்னை போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே பெரும் சித்தரவதைகளுக்கு போலீசார் உள்ளாக்கியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார் சரவணன்.
சிறுகுறு தொழில் முனைவோரின் கண்ணீரை துடைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சலுகைகளை அறிவிப்பதற்கு மாறாக தன்னை விமர்சிக்கவே கூடாது என்ற ரீதியில் திமுக கொடுங்கோல் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பது இந்த சம்பவத்தின் மூலம் பட்டவர்த்தனமாகிறது.
விடிவு பிறக்காதா என்ற ஏக்கத்தில் பட்ஜெட்டை விமர்சித்து கோரிக்கைகளை முன்வைத்த ஒரே காரணத்திற்காக ஆராஜக திமுக கும்பலால் கொடூர தாக்குதலுக்கு ஆளான பெண், கொடூரத்தை அரங்கேற்றியவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என கண்ணீரும் கம்பளையுமாக இருகைகளை கூப்பி வேண்டியது காட்சிகள் நெஞ்சையே உடைக்கும் விதமாக உள்ளது.