வெளிநாட்டில் வேலை... வேதனை தான் மிச்சம்... 2 பேரை மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை...

எழுத்தின் அளவு: அ+ அ-

வெளிநாட்டிற்கு சென்றால் பல லட்சங்கள் பணம் சம்பாதித்து குடும்பத்தின் வறுமையை போக்கலாம் என்று எண்ணி எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி, தனியார் ஏஜென்டுகளை நம்பி மோசம் போகும் இளைஞர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்..

பல கனவுகளுடன் வெளிநாடு சென்ற பிறகு தான் தெரிகிறது, உண்ண உணவில்லை, இருக்க இடமில்லை, கடும் உழைப்புக்கு உரிய கூலி இல்லாமல் ஏமாற்றப்பட்டோம் என்று. அப்படியொரு சம்பவம்தான் தற்போது அரங்கேறியுள்ளது. யார் அவர்கள், இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

மாலத்தீவில் வேலைக்குச் சென்று உணவில்லாமல் தவிக்கும் இருவர் தங்களை மீட்டுத்தர கோரி வெளியிட்டுள்ள வீடியோ தான் இவை...

வறுமையில் உள்ள இளைஞர்களை வெளிநாட்டு போலி ஏஜென்சிகள் குறி வைத்து, அவர்களிடம் சில ஆயிரம் ரூபாய்களை சொற்பமாக இங்கே கட்டி வெளிநாட்டில் வேலைக்கு சென்றால் பல லட்சங்களில் சம்பளம் என மூளைச் சலவை செய்கின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சேர்த்து வைத்த பணத்தை செலவிடாதவர்கள் இந்த ஏஜென்சியர்கள் சொன்னவுடன் மனதை மாற்றி கொண்டு சேர்த்து வைத்த பணத்தை அவர்களிடம் கொடுத்து ஏமாறுகின்றனர்.

சந்தோஷமாக விமானம் ஏறும் அவர்களுக்கு 2 மாதங்கள் வரை ஒன்றுமே தெரியாத மாய உலகில் வந்தது போன்று கடும் உழைப்பு, நல்ல உணவு, சம்பளம் வழங்கப்படுகிறது. பின்னர் மாதங்கள் செல்ல செல்ல வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தில் இருந்து குடைச்சல் கொடுக்க தொடங்குகின்றனர். சரியான உணவில்லை, சம்பளம் இல்லை, ஆனால் பின்னி பெடலெடுக்கும் அளவுக்கு வேலையை மட்டும் வாங்கி கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதற்கு பிறகு தான் தெரிகிறது, அடிமாட்டு விலைக்கு தாங்கள் விற்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அவர்களின் வேதனை சொல்லுண்ணா துயரமாக மாறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் காச்சகுடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரங்கநாதன் மற்றும் கடலூர் மாவட்டம் புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராணியின் கணவர் மணி ஆகிய இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு வேலைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சரிவர வேலை தராமலும், சம்பளம் கொடுக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது. தங்கள் இருவரையும் சொந்த ஊர் அனுப்பி வைக்ககோரி நிறுவனத்திடம் பலமுறை மன்றாடியும் பலனில்லை என மாலத்தீவில் சிக்கிய இருவர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, நண்பர்கள் மூலமாக வீடியோ மூலம் பேசி உறவினர்களுக்கு தாங்கள் படும் இன்னல்களை உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

இதனை அறிந்து பதறிபோன ரங்கநாதனின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும், மணியின் மனைவி ராணியும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் இருவரையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர். இவர்கள் இருவரின் கண்ணீருக்கு விடைக்கு கிடைக்குமா, இருவரையும் இந்தியா அழைத்து வர ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்....

Night
Day