ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதி மற்றும் தனியார் பள்ளியில் குளம்போல் சூழ்ந்துள்ள மழைநீர்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை ஓய்ந்தும் வெள்ளம் வடியாதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தேங்கியுள்ள மழைநீரை அகற்ற விளம்பர திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் 18-வது வார்டு ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதி மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி முழுவதும் மழைநீர்  குளம்போல் சூழ்ந்துள்ளது. மழை விட்டும் வெள்ளநீர் வடியாததால், அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். 

மேலும் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணாக்கர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day