எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக அமைச்சர் சேகர்பாபுக்கு சொந்தக்கட்சியை சேர்ந்த நபரே பகிரங்க மிரட்டல் விடுத்ததன் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடியோவில் இருப்பது என்ன? சாதாரண நபரின் மிரட்டலை கேட்டு அமைச்சரே அலறியதன் பின்னணி என்ன? விவரிக்கிறது இந்த செய்தொ தொகுப்பு..
உண்மையை போட்டு கொடுத்துடுவேன்.. எல்லாத்தையும் மீடியாகிட்ட சொல்லிடுவேன்...என விளம்பர திமுக அமைச்சர் சேகர்பாபு-வை அலறவிட்ட ஆடியோ தான் இது..!
அதாவது கொளத்தூர் தொகுதி திமுக இளைஞர் அணி செயலாளராக இருந்த மகேஷ் என்பவரின் ஆதரவாளர் என கூறிக்கொண்டு செல்போனில் அழைக்கும் தனராஜ் என்ற நபர் சேகர்பாபு-க்கு மிரட்டல் விடுத்ததோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டித்தீர்த்ததன் ஆடியோ தான் தற்போது அரசியல் களத்தை அனலாக்கியுள்ளது.
நானும் மதுரகாரன் தான் டா என விஷால் கூறுவது போல நானும் திமுககாரன் தான் என கூறிக்கொண்டு பேச முற்படும் தன்ரஜ்ஜை நீ யாரா இருந்தா என்ன நேர்ல வா.. என சேகர்பாபு அதட்ட வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது உன் செல்போன் நம்பரை வைத்து போலீசில் புகார் அளிப்பேன் என சேகர்பாபு பயத்தை காட்ட, பதிலுக்கு அதளபாதாளத்தில் இறங்கிய தன்ராஜ், யூடியூப்பர் சவுக்கு சங்கர் விஷயம் முதற்கொண்டு அனைத்து உண்மைகளையும் மீடியாவில் சொல்லிவிடுவேன் என பதில் மிரட்டல் விடுத்தது தான் தாமதம், கோபத்தில் கொப்பலித்த சேகர்பாபு ஆபாச வார்த்தைகளை அள்ளித்தெளித்தார் வசைபாடுவது ஆடியோவில் பதிவாகியுள்ளது..
இறுதியாக இருவரும் சுள்ளன் பட தனுஷ்-பசுபதி போல ஏய்.. ஏய்.. என மாறி மாறி ஏலம் விட்டு, ஒருவரையொருவர் காதுகள் கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டனர். திமுகவில் மிகவும் அதிகாரம் மிக்க கிச்சன் லாபியில் நெருக்கமாக இருக்கும் சேகர்பாபு, சென்னையில் நான் வைத்தது தான் சட்டம் என்ற ரேஞ்சுக்கு அதிகாரம் செலுத்தி வருகிறார். இப்படியிருக்கையில் ஆடியோவில் சேகர்பாபு-வையும் யூடியூபர் சவுக்கு சங்கரையும் தொடர்புப்படுத்தி தனராஜ் விடுத்த மிரட்டல் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்ததன் பின்னணியில் திமுகவின் தலையீடே இருப்பதாக புகார் எழுந்தது. அதுவும் விளம்பர திமுக முதல்வரின் சொந்த தொகுதியாக கொளத்தூரில் ஆம்ஸ்ட்ராங்-குக்கு அதீத செல்வாக்கு இருந்ததும் திமுகவுக்கு உருத்தலாகவே இருந்து வந்தது. அதுமட்டுமின்றி வடசென்னையில் கோலோச்சிய அதிகாரம் செலுத்தி வரும் திமுக அமைச்சர் சேகர்பாபு-வை தாண்டி ஆம்ஸ்ட்ராங் படுகொலை நிகழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் உண்மை குற்றவாளிகளை சேகர்பாபு தான் காப்பாற்றி வருவதாகவும் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையே முக்கிய காரணம் என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார் யூடியூப்பர் சவுக்கு சங்கர். இதையடுத்து அவரது வீடு தக்கப்பட்டதன் பின்னணியிலும் செல்வபெருந்தகையே இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த தாக்குதல் போலீசாரின் பரிபூரண ஆசியோடே நடந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் பல வீடியோ ஆதாரங்கள் வெளியாகியிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர ஆணையர் அருணின் நேரடி தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தின் பின்னணியில் செல்வபெருந்தகைக்கு பக்கபலமாக இருந்ததே சேகர்பாபு தான் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதுமட்டுமின்றி சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான டெண்டர் முதல் பல டெண்டர் மூலம் கல்லா கட்டி வருவதாகவும் யூடியூப்பர் சவுக்கு சங்கர் பல வீடியோக்கள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் திமுகவின் ஊழலையும் நிர்வாக சீர்கேடுகளையும் தனது வீடியோக்கள் மூலம் தோளுரித்து காட்டி வந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர், வழக்கு என்ற பேரில் திமுகாவால் மிக கொடூரமான சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டது ஊரறிந்த ஒன்று.
இப்படியாக சூழலில் தான் யூடியூப்பர் சவுக்கு சங்கர் விஷயத்தை நான் தான் பண்ணேன், அந்த உண்மையை மீடியாவிடம் சொல்லிவிடுவேன் என சேகர்பாபுவுக்கு திமுகவை சேர்ந்த தன்ராஜ் பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கும் ஆடியோ வெளியாகி பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, சேகர்பாபுவுக்கு மிரட்டல் விடுத்த தன்ராஜ்ஜின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.