ED-க்கு கிரீன் சிக்னல்! ஆட்டம் கண்டுள்ள அறிவாலயம்!

எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறையின் சோதனைக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பது திமுக கூடாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. நடந்தது என்ன? அடுத்து என்ன? விரிவாக பார்க்கலாம்..!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி ரெய்டு தான் தற்போது திமுகவுக்கு லேட்டஸ்ட் தலைவலியே...

திமுகவின் நிதி ஆதாராங்களின் பிரதானமாக இருக்கும் டாஸ்மாக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி ரெய்டால் அறிவாலயமே அரண்டு போனது. அதுமட்டுமா.. ரெய்டின் முடிவில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு அறிவாலயத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அமலாக்கத்துறை...

டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் 44 ஆயிரம் கோடி ரூபாய் என்ற நிலையில் உதாரணத்துக்கு மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு லட்சம் மதுபாட்டில்களில் 50 ஆயிரம் மட்டும் தான் டாஸ்மாக்கின் கணக்கில் வருவதாகவும் மீதி கள்ளக்கணக்கில் டாஸ்மாக் கடைகளுக்கு நேரடி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் சொல்லப்படும் நிலையில் 2ஜி ஊழலையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.. 

பாட்டில் மூடி முதல் அட்டை பெட்டி வரை டாஸ்மாக்கில் நடத்தப்படும் இமாய ஊழல் அனைத்துக்கும் அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே முழு பொறுப்பு என்ற நிலையில் டாஸ்மாக் முறைகேடு பணம் அனைத்தும் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனி மூலமே திமுக முதல்வர் மட்டுமின்றி அவரது குடும்பத்து கஜானாக்களுக்கும் நேரடியாக டைவர்ட் ஆவதாகவும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

இப்படி திமுகவின் பிரதான நிதி ஆதாரத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாலேயே சொந்த கட்சி அமைச்சர்களுக்கு கூட கொடுக்காத மரியாதையை, 5 கட்சி தாவிய செந்தில் பாலாஜிக்கு திமுக மேலிடம் கொடுத்ததன் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு பணப்பரிவர்த்தனை புகாரில் சிறை சென்று வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக முதல்வரே நேரடியாக இறங்கி வந்து தொட்டுபார்.. சீண்டிப்பார்.. என வீரமுழக்கம் போட்டதே சாட்சியாகவும் உள்ளது. 

நிலைமை இப்படி இருக்கையில்.. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் PEN DRIVE, சில குறிப்புகள் அடங்கிய டைரி, சின்ன சின்ன துண்டு காகிதத்தை கூட ஆய்வுக்கு எடுத்துச்சென்றதாம் அமலாக்கத்துறை. அதில் கைப்பற்றப்பட்ட டைரியில் தான் டாஸ்மாக் தொடர்பான திமுக-வின் ஒட்டுமொத்த தில்லுமுல்லும் அடங்கியிருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதாவது டாஸ்மாக்கின் முறைகேடு பணம் அத்தனையும் யாருக்கெல்லாம், எங்கெங்கெல்லாம், எந்தெந்த வடிவங்களில் எல்லாம் எவ்வளவு நிதி கைமாறியது, மதுபான ஆலைகளில் இருந்து பெறப்பட்ட கமிஷன் தொகை எவ்வளவு, தனியார் பார் மற்றும் மனம் மகிழ் மன்றங்கள் மூலமான கமிஷன் டீலிங் என்ன? போன்ற டாஸ்மாக்கின் ஒட்டுமொத்த ஜாதகமே அந்த டைரியில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. 

இப்படி திமுக-வின் குடுமி அமலாக்கத்துறை வசம் சிக்கிய நிலையில் டாஸ்மாக் தலைமையகத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையே நீதிமன்றத்தில் வாய்விட்டு கூறியது திமுக மேலிடத்தின் அடிவயிற்றில் புளியை கரைத்தது. அமலாக்கத்துறையின் விசாரணை திமுகவின் பிராதன நிதி ஆதாரத்தையே முடக்கும் என்ற நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பணபலத்தை மட்டுமே நம்பியிருக்கும் திமுகவுக்கு அது சிக்கலாகவே முடியும் என்றும் சொல்லப்படுகிறது. 

அதுமட்டுமின்றி டாஸ்மாக் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை தொடர்ந்தால் செந்தில் பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி என்ற நிலையில் ஈ.டி-யின் கைது லிஸ்டில் திமுகவின் முதல்வரே சிக்கக்கூடிய நிலை ஏற்படும் என்கின்றனர் நன்கு அறிந்தவர்கள். இதனாலேயே டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி நீதிமன்றங்களின் கதவை தட்டியது திமுக அரசு. 

இப்படியான சூழலில் தான் டாஸ்மாக் தொடர்பான விசாரணையை சட்டப்படி தொடர்ந்து நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். இந்த உத்தரவால் திமுக மேலிட கூடாரமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் அனைத்தும் சுட்டெரிக்கும் வெயிலை காட்டிலும் அனலை கக்கும் என்பது உறுதி.. 

Night
Day