NIA கஸ்டடியில் தஹாவூர் ராணா..! பேப்பர்... பேனா... கேட்டது ஏன்!

எழுத்தின் அளவு: அ+ அ-

2008 மும்பை தாக்குதலின் MASTER MIND தஹாவூர் ராணா என்.ஐ.ஏ கஸ்டடியிலேயே தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எங்கு அடைக்கப்பட்டிருக்கிறார் தஹாவூர் ராணா? விசாரணையின் கோணம் என்ன? விரிவாக பார்க்கலாம்.. 

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய MASTER MIND-ஆன பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா பலகட்ட முன்னெடுப்புகளுக்கு பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​ட அவரை, 18 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் தான் கஸ்டடியில் இருக்கும் ராணா தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள NIA தலைமையகத்தில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட அறையில் தான் ராணா அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 14க்கு-14 அடி அளவு கொண்ட அறையில் பல அடுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு மத்தியில்  அடைக்கப்பட்டுள்ள ராணாவை பார்க்கவோ, விசாரணை நடத்தவோ 12 அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம். ராணாவின் அடிப்படை தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் போன்ற அனைத்தும் பலக்கட்ட சோதனைக்கு பின்னரே ராணாவை சென்று அடைவதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக சொல்லபோனால் ராணாவை கஸ்டடியில் எடுத்த பிறகு டெல்லி NIA தலைமை அலுவலகமே ஒரு பாதுகாக்கப்பட்ட கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. டெல்லி போலீசார், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி, டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஒருவரை ராணா தினமும் சந்தித்து வருவதாகவும் 48 மணி நேரத்திற்கு ஒரு முறை ராணா மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. NIA கஸ்டடியில் இருக்கும் பயங்கரவாதி ராணா கேட்டுக்கொண்டதன் பேரில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பிரதி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 5 முறை ராணா தொழுகையில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

இதை தாண்டி ராணா ஒரு பேப்பர் மற்றும் பேனாவை கேட்டிருப்பது தான் ஏன்? என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ராணாவின் வேண்டுதலுக்கு இணங்க அவருக்கு பேப்பரும் பேனாவும் கொடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் நிலையில் இதன் பின்னணியில் ராணா தற்கொலை செய்து கொள்வதற்கான சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. 

பொதுவாகவே சிறை கைதிகள் கூர்மையான பொருட்களை கொண்டு தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில் விசாரணையில் இருந்து தப்பிக்க பேனா-வை கொண்டு ராணா தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதால் ராணாவின் அங்க அசைவுகள் ஒன்வொன்றையும் கண் கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறது என்.ஐ.ஏ. இதற்காகவே SOFT NIB கொண்ட பிரத்தியேக பேனா ராணாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.  

இதற்கிடையே பயங்கரவாதி ராணாவிடம் மும்பை தாக்குதலில் மேலும் ஒரு MASTER MIND-ஆன பாகிஸ்தானி-அமெரிக்கரும் லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவருமான டேவிட் ஹெட்லி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 17 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை தாக்குதலில் ராணாவின் பங்களிப்பையும் நாட வேளை எவ்வாறு EXECUTE செய்யப்பட்டது என்பதை ராணாவை பல இடங்களுக்கு நேரில் அழைத்துச்சென்று மீண்டும் ரீ-கிரியேட் செய்யும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

varient
Night
Day