SIP-UP ICE-ன் மேக்கிங் வீடியோ..! அதிர்ச்சியில் 90’S கிட்ஸ்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய SIP-UP ICE முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மேக்கிங் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு குழந்தைகளை குறி வைத்து விதவிதமான ஐஸ்கிரீம் விற்பனைகள் களைகட்டியிருக்கும் நிலையில் அதன் தரத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தின் எச்சரிக்கை மணியாகவே இந்த வீடியோ பார்க்கப்படுகிறது. 

பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம் தான். அதிலும் 90-ஸ் காலத்தில் குச்சி ஐஸ், பால் ஐஸ் போன்றவை கோலோச்சி இருந்தாலும் இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி ICE CREAM MARKET-ஐயே ஒரு கலக்கு கலக்கியது SIP-UP ICE. 

இன்றைக்கும் சோஷியல் மீடியாக்களின் அவ்வபோது உலா வரும் 90-ஸ் கிட்ஸ்-களின் nostalgic memories-களில் SIP-UP ICE-க்கு தனி இடமே உண்டு. அந்த அளவுக்கு SIP-UP ICE சுவைக்காத கிட்ஸ்களே இல்லை என்று கூட சொல்லலாம். ஏன் இப்போதும் SIP-UP ICE-க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தநிலையில் தான் SIP-UP ICE பிரியர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது அதன் மேக்கிங் வீடியோ காட்சிகள். 

முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் எதை எதையே கலந்து கடைசியில் பிளாஸ்டில் டியூப்பில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் இந்த SIP-UP ICE-ன் மேக்கிங் வீடியோ-வை பார்க்கும் மக்கள் இதை தான் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சுவைத்தோமா என்ற ரீதியில் தலையில் அடித்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இப்படி பிளாஸ்டில் டியூப்பில் அடைக்கப்பட்டு ரெடி செய்யப்பட்ட SIP-UP ICE-ஐ அந்த நபர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் தண்ணீரில் முக்கி அலசி எடுப்பது தான் என்னையா கண்ட்ராவி என்ற ரகமாக இருந்தது. 

இதில் மனவேதனை அடைந்த நெட்டிசன் ஒருவர் எங்க அம்மா அண்ணைக்கே சொன்னாங்க நான் தன் கேட்கலை என கமெண்டில் ஆதங்கத்தை கொட்டியிருப்பது தான் ஹைலைட்டே. இந்த மேக்கிங் வீடியோ வடக்கு மாநிலத்தை சேர்ந்தது என்றாலும் தற்போது கோடை காலம் தொடங்கியதை யொட்டி தமிழகத்திலும்  குழந்தைகளை குறி வைத்து SIP-UP ICE போன்ற விதவிதமாக ஐஸ்கிரீம் விற்பனை படுஜோராக நடைபெற்று வரும் நிலையில் அதன் தரத்தை பறிசோதிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது இந்த வீடியோ.

இப்படி சுகாதார மற்ற முறையில் SIP-UP ICE-ஐ தயாரித்து குழந்தைகளின் உயிரோடு விளையாடும் போக்கு கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஐஸ்கிரீம்களின் தரம் குறித்து உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையே.

Night
Day