எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு, சேலம், தர்மபுரி விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, தென்மேற்கு பருவமழை குறித்த நீண்ட கால அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பதிவாகும் என்றும், குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா பகுதிகளில் இயல்பிற்கு அதிக மழை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவிக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை மூலம் நேரடியாக மழை பெறாவிட்டாலும், வெப்பச்சலனம் மூலம் 44 சென்டி மீட்டர் மழை பதிவாககூடும் என்று தெரிவித்துள்ளது.