சித்திரை மாதம் முதல் நாளில் நடைபெற்ற பொன் ஏர் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பருவமழை போதிய அளவில் பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கோவில்பட்டி அருகே பொன் ஏர் திருவிழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிதப்புரம் கிராமத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளில் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி பொன் ஏர் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, பிதப்புரம் கிராமத்தில் நடைபெற்ற பொன் ஏர் திருவிழாவில், கரிசல் பூமி விவசாயிகள் ஒன்று சேர்ந்து வீட்டு முற்றத்தில் வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, பூ, பழங்கள், நவதானியங்கள் வைத்து தீபம் ஏற்றி நிறைகுடம் தண்ணீர் வைத்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து பொது நிலத்தில் 20 டிராக்டர்கள், 2 ஜோடி காளை மாடுகளுடன் உழவு பணிகள் செய்து நவதானியங்களை விதைப்பு செய்தனர். 

Night
Day