கும்பரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கடந்த இரண்டு நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால், அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வரும் சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கும்பக்கரை அருவியில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

Night
Day