எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தஞ்சாவூர் அருகே உள்ள, அருள்மிகு பரிதியப்பர் திருக்கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். ஊர்மக்கள் சார்பாக, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட உளூர் அருகே அமைந்துள்ள அருள்மிகு மங்களநாயகி உடனுறை பரிதியப்பர் பாஸ்கரேஸ்வரர் ஆலயம், திருஞானசம்பந்தரால் திருப்பதிகம் பாடப் பெற்ற புண்ணிய தலமாகும். இந்த திருக்கோயிலில் உள்ள இறைவனை சூரியன் வழிபட்டு, பித்ரு தோஷம் நீங்கியதாக ஐதீகம். பாடல் பெற்ற தென்கரை தலங்கள் வரிசையில் இக்கோவில் 101வது இடத்தில் உள்ளது.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருக்கோவிலுக்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
புரட்சித்தாய் சின்னம்மா வருகை குறித்து அறிந்த ஊர் மக்கள், பெருமளவில் திரண்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சூரிய பகவானை வணங்கிய புரட்சித்தாய் சின்னம்மா, மூலவர் பாஸ்கரேஸ்வரர் மற்றும் மங்கள நாயகியை வணங்கி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார். சின்னம்மாவுக்காக திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.