கஞ்சா போதையில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்றின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பேர் வேணுகோபால் தெருவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மணிவண்ணன், மணிமாறன் வசித்து வரும் வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இதனால் பதற்றமடைந்த இருவரும் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க சுவர் விரிசல் ஏற்பட்டதுடன், மேற்கூரை மற்றும் ஜன்னல் கண்ணாடி உடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே இச்சம்பவம் அரங்கேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிவண்ணன், தனது உறவினரின் காலி இடத்தில் சிலர் மது மற்றும் கஞ்சா புகைப்பதை போலீசாரிடம் புகார் அளித்ததால், மர்மநபர்கள் ஆத்திரமடைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Night
Day