மயிலாடுதுறை அருகே தாமரைகுல மகா மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே தாமரைகுல மகா மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காவிரிக்கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். காளியாட்டம் முன் செல்ல வயதான பக்தர் ஒருவர் சூலாயுதத்தை தோளில் சுமந்தபடி நடனமாடிய காட்சி பக்தர்களை பக்தி பரவசமடைய செய்தது. பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Night
Day