க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சொத்து தகராறு காரணமாக கத்தியால் குத்தியதில், ரத்தம் சொட்ட சொட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்கொடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனுக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ஏழுமலையும் அவரது நண்பர் பிரவீன் குமாரும் மயிலம் சாலையில் உள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு வெளியே வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராஜேந்திரனை, கண்ட ஏழுமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த பிரச்னையை தடுக்க வந்த ராஜசேகரையும் அவர் தாக்கிதாக கூறப்படுகிறது.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...