காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்‍கு ரூ.12.53 கோடி சொத்துக்‍கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, தமக்‍கு 12 கோடியே 53 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் சோனியாகாந்தி, தமது வேட்பு மனுவுடன் சொத்து பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார். இதன்படி இத்தாலியில் உள்ள தமது தந்தையின் சொத்தில் 27 லட்ச ரூபாய் அளவுக்‍கு பங்கு இருப்பதாகவும், இது தவிர தமக்‍கு 88 கிலோ வெள்ளி, ஆயிரத்து 267 கிராம் தங்கம் மற்றும் நகைகள் உள்ளதாக கூறியுள்ளார்.
டெல்லி அருகே தமக்‍கு 81 ஆயிரம் சதுர அடி விவசாய நிலம் இருப்பதாகவும் கையில் 90 ஆயிரம் ரூபாய் உள்ளதாகவும் 
கார் எதுவும் இல்லை எனவும், சமூக வலை தளங்களில் கணக்‍கு இல்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

Night
Day