டெல்லி கார் வெடிப்பு : மேலும் ஒரு மருத்துவர் காஷ்மீரில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு மருத்துவர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானதாக கூறப்படும் டாக்டர் உமரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. ஏற்கனவே உமரின் தாயார் சமீமா பேகம் மற்றும் 2 சகோதரர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். வெடிவிபத்தில் இறந்த உமரை அடையாளம் காணும் வகையில், சமீமாபேகத்துக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும் மருத்துவர் உமரின் தந்தை குலாம் நபி பாத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடக்கிறது. மேலும் உமருடன் பணியாற்றிய 3 டாக்டர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீநகர் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த குல்காமை சேர்ந்த மருத்துவர் தாஜாமுல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவருக்கும் கார் வெடிப்பு சம்பவத்தில்  இறந்த மருத்துவர் உமருக்கும், இவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, டெல்லியில் வெடித்த காரை விற்பனை செய்த டீலர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Night
Day