பிரதமர் மோடியை வரவேற்று மூவர்ணத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலீஃபா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஐக்கிய அரபு அமீரக பயணத்தையொட்டி துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா இந்திய தேசியக் கொடியின் முவர்ணத்தில் ஜொலித்தது. அதில் 'கெஸ்ட் ஆஃப் ஹானர் - ரிபப்ளிக் ஆஃப் இந்தியா' என்ற வார்த்தைகளும் ஒளிர்ந்தன. இதனை எக்ஸ்தளத்தில் பகிர்ந்துள்ள துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், இந்த ஆண்டுக்கான உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினரான இந்தியக் குடியரசையும், இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடியையும் அன்புடன் வரவேற்பதாகவும் நமது நாடுகளுக்கிடையேயான வலுவான உறவுகள் சர்வதேச ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக விளங்குவதாகவும் பதிவிட்டுள்ளார்

varient
Night
Day