மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து - பெண் மேலாளர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள LIC அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் மேலாளர் உயிரிழந்த நிலையில், ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலமாரட் வீதி பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் கிளை அலுவலகம் 2வது தளத்தில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் மின் கசிவு காரணமாக திடீரென எல்ஐசி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சில நிமிடங்களிலயே 2வது தளம் முழுவதும் தீ மளமளவென பரவ தொடங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பெரியார் நிலையம், தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தின் போது, பணியில் இருந்த பெண் மேலாளர் கல்யாணி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலாளரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, தீ விபத்து நடந்த கட்டிடத்தில் நடைபெற்ற மீட்பு பணிகளை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், உயிரிழந்த பெண் மேலாளரின் சடலத்தை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

Night
Day