ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர் கேசவனுக்கு புதிய பொறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜாஜியின் கொள்ளு பேரனான சி.ஆர் கேசவனுக்கு பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலுமான ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர் கேசவன் கடந்த 23 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு  பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவில் நீண்ட காலமாக பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாஜக தேசிய தலைமை சி.ஆர் கேசவனுக்கு, தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பை வழங்கியுள்ளது.

Night
Day