நீதித்துறை செயல்பாட்டை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீதித்துறை செயல்பாட்டை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் உள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்-டுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு குறித்த வழக்குகளில், நீதித்துறை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கில் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள், நீதித்துறை செயல்முறைகளில் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், எனவே இந்த கும்பலுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day