உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தெற்கு சீனாவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதில் குவாங்டாங் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மழையின் தீவிரம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...