மீண்டும் செயல்பட தொடங்கிய வாயேஜர் - 1 விண்கலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

5 மாதங்களுக்கு பிறகு வாயேஜர் விண்கலம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 1977ம் ஆண்டு சூரிய குடும்பத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட வாயேஜர் - 1 விண்கலம் கடந்த நவம்பர் மாதம் செயலிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது 24 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்கலம் மீண்டும் தரவுகளை அனுப்பி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் வாயயேஜர் விண்கலம் அதன் நிலைக்கு மீண்டும் திரும்பி உள்ளதால், அதனை கூர்மையாக ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day