நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே மண்ணில் புதைந்த சோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு கிராமமே மண்ணில் புதைந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள யாம்பலி என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் மக்கள் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த கிராமமே மண்ணில் புதைந்தது. இதில் சுமார் 2ஆயிரம் பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்ணில் புதைந்த நபர்களை மீட்க போதிய உபகரணங்கள் இல்லாததால் மண்வெட்டி மற்றும் வெறும் கைகளால் சகதிகளை தோண்டி மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து நிகழ்ந்து 5 நாட்கள் ஆகியும் மக்கள் மீட்கப்படாததால் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது...

Night
Day