மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் தடுக்கும் இஸ்ரேல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச நாடுகள் அனுப்பி வரும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் அந்த நகரமே சின்னாபின்னமாகி வருகிறது. அங்குள்ள பல லட்சம் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது. ஆனால் காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Night
Day