விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கும் என அஞ்சப்படும் விண்கல் ஒன்று பூமியை தாக்க 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைப்பட்டு, மாரிலாந்தில் உள்ள 

ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியில் இருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விண்கல் 2038ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், இந்த விண்கல்லின் எடை, அளவு குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day