க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
ஆஸ்த்ரேலியாவில் கிறிஸ்தவ பாதிரியாரை கத்தியால் குத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். சிட்னியின் வேக்லேக் புறநகர் பகுதியில் உள்ள தி குட் ஷெப்பர்டு கிறிஸ்தவ ஆலயத்தில் மர்மாரி இமானுவல் எனும் கிறிஸ்துவ பாதிரியார் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் பாதிரியாரின் நெஞ்சில் குத்தியதில், அவர் படுகாயமடைந்தார். இதனைக் கண்டு அங்கிருந்த சிலர் அந்த மர்ம நபரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பாதிரியாரை மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...