டெல்லி "லேடி டான்" ஹாஷிம் பாபாவின் மனைவி சோயா கான் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியின் லேடி டான் என அழைக்கப்படும் ஹாஷிம் பாபாவின் மனைவி சோயா கான், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 270 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 


33 வயதான சோயாவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நீண்ட காலமாக கண்காணித்து வந்தனர். ஆனால், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் எந்த நேரடி தொடர்பும் இல்லாத வகையில், தனது கணவரின் குற்ற சாம்ராஜ்யத்தை அவர் நிர்வகித்து வந்தார். அதனால் உறுதியான ஆதாரம் கிடைக்காததால் இதுவரை கைது செய்யப்படாமல் இருந்த அவர், தற்போது ஹெராயினுடன் பிடிபட்டுள்ளார். தற்போது சிறையில் உள்ள ஹாஷிம் பாபா மீது கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் முதல் ஆயுதக் கடத்தல் வரை ஏராளமான வழக்குகள் உள்ளன. சோயா கான் அவரது மூன்றாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது

Night
Day