க்ரைம்
சுரேஷ் ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய செ?...
தெலங்கானாவில் ரயில்வே போலீஸ் அதிகாரி என கூறி ஊரை ஏமாற்றி வந்த பெண், மாப்பிள்ளை பார்க்கும் போது போலீசில் சிக்கினார். நல்கொண்டாவை சேர்ந்த மாளவிகாவிற்கு ரயில்வே போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது ஆசை. இதற்காக 2018 ஆண்டு ஆர்.பி.எப். தேர்வில் பங்கேற்றார். ஆனால் பார்வை குறைபாடு காரணமாக அவரால் தகுதி பெற முடியவில்லை. தன் பெற்றோரையும், கிராம மக்களையும் திருப்திப்படுத்த நினைத்த அவர் ஆர்.பி.எப்., போலீசார் சீருடையை விலைக்கு வாங்கி அணிந்து கோயில்களுக்குச் செல்வது, அரசியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதுமாக இருந்து ஊர் மக்களை நம்ப வைத்தார். தற்போது அவருக்கு மாப்பிள்ளை பார்த்ததையடுத்து, மாப்பிள்ளை வீட்டார் ஆர்.பி.எஃப் உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, உண்மை நிலவரம் தெரிய வர, மாளவிகா மீது நல்கொண்டா ஆர்.பி.எப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய செ?...
கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீதான தவறான ...