பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வருகை தந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து, பாரதீய ஜனதா கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இதற்கான உடன்பாடு கையெழுத்தானது. இந்த தொகுதிகள், என்னென்ன? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

varient
Night
Day